த்ரில் வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது இலங்கை – திணறியது நியூசிலாந்து

CRICKET-WORLD-ICCT20-NZL-SRIசிட்டகொங்: இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான வாழ்வா சாவா போட்டியில் ரங்கண ஹேரத்தின் அபார பந்து வீச்சுடன் 59 ஓட்டங்களால் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. 5ஆவது இருபது-20 உலக கிண்ணத் தொடர் பங்களாதேஷில் இடம்பெற்று வருகின்றது. இதன் சுப்பர் 10 சுற்றில் விளையாடும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

 
இதன்படி குழு 1இல் இலங்கை, தென்னாபிரிக்கா,  இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளும், குழு2இல் இந்தியா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் அணிகளும் இடம் வகிக்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
Sri Lanka v New Zealand - ICC World Twenty20 Bangladesh 2014
 
இந்த நிலையில் சூப்பர்–10 சுற்றில் குழு 2இல் இன்று இரவு சிட்டகொங் தேசிய மைதானத்தில் அரங்கேறிய  ஆட்டத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் அரையிறுதிக்குள் நுழையும் நோக்கில் களமிறங்கியிருந்தமையால் போட்டி சுவாரஸ்யமாக காணப்பட்டது.
 
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளை இழந்து 119 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
 
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய குசேல் ஜனித் பெரேரா ஆரம்பமே அதிரடியை தொடர்ந்தார். எனினும் நீண்ட நேரடிம் நீடிக்கவில்லை. 16 ஓட்டங்களுடன் அரங்கு திரும்ப அடுத்த வந்த ஜயவர்தன டில்சானுடன் கைகோர்த்தார். 
Sri Lanka v New Zealand - ICC World Twenty20 Bangladesh 2014
 
இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்காக இணைப்பாட்டமாக 9 ஓட்டங்களை பெற்றிருந்த போது டில்சான் 16 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார். அடுத்து வந்த குமார் சங்கக்கார 4 ஓட்டங்களுடன் ஏமாற்றமளிக்க அணி தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. 
 
பின்னர் வந்த மெத்தியூஸ் 6, குலசேகர 0, ஹேரத் 1, மாலிங்க 0 என ஏமாற்றமளிக்க அதிகூடுதலாக மஹேல ஜயவர்தன 25, திரிமன 20, திசர பெரேரா 16 ஓட்டங்களை அணியை ஓரளவு சரிவிலிருந்து மீட்டனர்.
 
நியூசிலாந்து அணியின் பந்து வீச்சில் நீசாம் 3, மெக்கிலேஹேன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
இதனையடுத் 120 என்ற சொற்ற ஓட்ட வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 15.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 60 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
 
நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் குப்டில் 5, மெக்கலம் 0, டெய்லர் 0, நீசாம் 0, ரொனச் 2, நாதன் மெக்கலம் 2, மில்ஸ் 4 என அதிர்ச்சியளிக்க ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இறுதிவரை போராடிய வில்லியம்சன் 42 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
 
இப்போட்டியில் அபாரமாக பந்து வீச்சை மேற்கொண்ட ரங்கண ஹேரத் 3.3 ஓவர்களில் 3 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்டுகளையும்  சேனாநாயக இரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
இப்போட்டியின் ஆட்டநாயகனாக ரங்கண ஹேரத் தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அரையிறுதிக்குள் நுழைந்துள்ளதோடு நியூசிலாந்து தொடரிலிருந்து வெளியேறியது.  
Sri Lanka v New Zealand - ICC World Twenty20 Bangladesh 2014
VK
   

Published by

Leave a comment