கிண்ணியா: அரச நிறுவனங்களிடையே உற்பத்தி திறனை ஊக்குவிக்கும் நோக்கில் அதிசிறந்த விருதுகள் – 2013 எனும் போட்டி நிகழ்வானது கிழக்கு மாகாண அரச நிறுவனங்களுக்கிடையே நடத்தப்பட்டுவருகின்ற நிலையில் நேற்று கிண்ணியா நகரசபைக்கு அவற்றினை பரிசீலிக்கும் முகமாக அதிகாரிகள் குழாம் வருகை தந்து போட்டிக்கான பார்வையிடலை மேற்கொண்டது.
இதன் போது கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு நகரசபை செயலாளர் யாழினி நரேந்திரநாத்திடம் பணிப்புரை விடுத்ததற்கிணங்க செயலாளார் அதற்கான வசதிகளை செய்து கொடுத்தார்.
குறித்த போட்டிக்காக மாகாண அரச நிறுவனங்கள் மாகாண அமைச்சுக்களுக்கிடையில், திணைக்களங்களுக்கிடையில், நிறுவனங்களுக்கிடையில் என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு போட்டி நடத்தப்படுகின்றன. அதிசிறந்த விருதுகள் வழங்கும் போட்டித் தெறிவின் உள்ளடங்களாக கிண்ணியா நகரசபையின் செயற்பாடுகளையும், முன்னேற்றங்களையும் பிரதிபலிக்கும் வகையிலான 15 நிமிட பவபொய்ன்ட் பிரசன்டேசன் ஒன்றினை நகரசபை உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம்.நௌசாத் வழங்கி வைத்தார்.
இதன் போது கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், செயலாளர் யாழினி நரேந்திரநாத், அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் இர்சாத் தலைமையிலான குழு, ஏ.எஸ்.எம்.நௌசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Published by

Leave a comment