வெயிலில் சென்று கொண்டிருந்த யுவதிகளை கேலி செய்த இருவருக்கு கிடைத்த தண்டனை!

punishmentஅபூஹக்

மாத்தறை: வெயிலில் சென்று கொண்டிருந்த இரு யுவதிகளை கேலி செய்த நடைபாதை வியாபாரிகளுக்கு அந்த யுவதிகள் இருவருக்கும் குடை வாங்கிக் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டமை தொடர்பான தகவலொன்று மாத்தறை நகரில் பதிவாகியுள்ளது.

நகைச்சுவை உணர்வுடைய நடுத்தர வயதைத் தாண்டியிருந்த இரு வியாபாரிகளும் நடைபாதையில் ஆடை விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது முன்னால் நடந்து சென்றுகொண்டிருந்த இரு யுவதிகள் மீது இவர்களது கவனம் திரும்பியது.

‘ஆங் தங்கச்சிமாரே ஏன் வெயில்ல போறீங்க’ என அவர்களிடம் வேடிக்கையாக வினவியுள்ளனர். அவ்விடத்தில் பொலீஸ் உயரதிகாரியொருவர் சிவில் உடையில் நின்றுகொண்டிருந்திருக்கிறார்.

நடந்து சென்று கொண்டிருந்த இரு யுவதிகளை நிற்குமாறு கூறிய அவ்வதிகாரி ‘இவங்க ரெண்டு பேரும் வெயில்ல போறது உமக்கு கவலை தானே? அப்படியென்றால் அவர்களிருவருக்கும் குடையொன்றை வாங்கிக் கொடுங்கள்’ என கம்பீரமான பொலீஸ் அதிகாரி கூறியிருக்கிறார்.

அப்போதுதான் நடைபாதை வியாபாரிகள் இருவருக்கும் தமக்கருகில் நிற்பது பொலீஸ் உயரதிகாரி என்பது புரிந்தது.

அந்த பொலீஸ் உயரதிகாரிக்குப் பயந்த இரு நடைபாதை வியாபாரிகளும் அருகிலிருந்த கடையொன்றிற்குச் சென்று 400 ரூபா கொடுத்து புதிய குடையொன்றை கொள்வனவு செய்து அந்த இரு யுவதிகளிருவரிடமும் கொடுத்தனர்.

பொலீஸ் அதிகாரிக்கு நன்றி தெரிவித்துவிட்டு சிரித்தவாறே அவர்களிருவரும் அவ்விடத்திலிருந்து சென்றனர்.

இனிமேல் இந்த இடத்தில் இருந்து யாரையும் கேலி செய்வதில்லை என அருகில் இருந்தேரிடம் இரண்டு நடைபாதை வியாபாரிகளும் கூறினராம்.

Published by

Leave a comment