புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா
புத்தளம்: வாழுகின்ற பொது வாழ்த்துகின்ற பணி முக்கியமானது.அந்த பணியினை செய்ய முன்வர சிறந்த மனப்பான்மை மற்றும் நல்ல உள்ளம் படைத்திருக்க வேண்டும். இவ்வாறான பணிகள் அரிதாக காணப்படுகின்ற நிலையில் இந்த வரலாற்று நுால் வெளிவருவது பாராட்டுக்குரியது என கவிஞரும், புத்தளம் நகர பிதாவுமான கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.
யாழ் எம்.எஸ்.எம்.ஜான்சின் தொகுத்துள்ள மணிபல்லவத்தார் சுவடுகள் என்னும் நுாலின் வெளியீட்டு விழாவி புத்தளம் இபுனு பதுாதா மண்டபத்தில் சனிக்கிழமை இடம் பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் புத்தளம் நகர முதல்வர் பேசுகையில் கூறியதாவது –
இன்றைய காலகட்டத்தில் இந்த நுால் வெளிவருவது வாழ்கின்றவர்களையும், வாழ்ந்தவர்களின் சேவைகளையும் நினைவு கூர்வதுடன், அவர்களது பணிகளை மக்கள் அறியச் செய்யும் நோக்கில் இரண்டு விடயங்களை உள்ளடக்கியதாக உள்ளதாக பார்க்கின்றேன். யாழ்ப்பாணத்தின் சிறப்புக்களை இந்த நுால் சுமந்துவருகின்றது.
அதே வேளை இவ்வாறு புத்தளம் மண்ணிலும் பல பணிகளை சமூகத்திற்கு ஆற்றியவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் குறித்த தகவல்களையும் களஞ்சியமாக வெளிக் கொண்டுவருவதற்று ஆக்கமும், ஊக்கமும் தேவையாகவுள்ளது. அந்த பணியினை நாங்கள் செய்ய முனையும் போது எங்களது பணிகள் அதற்கு நேரம் கொடுக்காத நிலையில் உள்ளது.அவ்வாறானெதொரு புதிய நுால் வெளிவர வேண்டும் என்பது எனது ஆவலாகும் என்றும் கூறினார்.
இந்த நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இலயாஸ், முன்னால் மாகாண அமைச்சர் எம்.எச்.எம்.நவவி, யாழ் மாநகர சபை உறுப்பினர் மௌலவி சுபியான் உட்பட பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
Published by

Leave a comment