அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை ஹாஜியாரின் வாழ்வும் பணியும் நூல் வெளியீட்டு விழாவில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆற்றிய உரையின் முழுமையான ஒலிப்பதிவு

unnamed (2)ஒலிப்பதிவு – பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஸ்தாபகரும், முன்னாள் காத்தான்குடி பிரதேச சபையின் தவிசாளரும், மூத்த அரசியல் வாதியும், சமூக சேவையாளரும், காத்தான்குடி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மாமனிதர் மர்ஹூம் அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை ஹாஜியார் மறைந்து 25 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரின் தியாக வாழ்வையும் ,ஈடிணையற்ற பணிகளையும் நினைவு கூறும் முகமாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் வெளியிடும் அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை

ஹாஜியாரின் வாழ்வும் பணியும் நூல் வெளியீட்டு விழா காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர்எம்.ரீ.எம்.ஹாலித் ஜே.பி தலைமையில் 28-03-2014 நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட  மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் ,  பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அங்கு ஆற்றிய உரையின் முழுமையான ஒலிப்பதிவு எமது வாசகர்களுக்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.  

Published by

Leave a comment