மட்டக்களப்பு மாவட்ட ரிதிதென்ன அபூபக்கர் சித்தீக் ஜூம்ஆ பள்ளிவாயல் திறப்பு.
-டீன் பைரூஸ்-
ரிதிதென்ன: மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமமாக அமைந்துள்ள ரிதிதென்னையில் (28.03.2014 வெள்ளிக்கிழமை) அபூபக்கர் சித்தீக் ஜீம்ஆ பள்ளிவாயல் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அல்ஹாஜ். ஹிஸ்புல்லாவினால் திறந்து வைக்கப்பட்டது. பள்ளிவாயல் திறப்புவிழாவுடன் ஜூம்ஆ தொழுகையும் காத்தான்கு இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவர் அலியார் (றியாழி) அவர்களினால்ஆரம்பித்துவைக்கப்பட்டது.
சுமார் 15 மில்லியன் ருபாய் செலவில் பள்ளிவாயலினை கட்டி முடிப்பதற்காக எல்லா வகையிலும் உதவி புரிந்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களுக்கு ரிதிதென்ன மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் ரிதிதென்ன அபூபக்கர் சித்தீக் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் தாஹிர் அவர்கள்.
பள்ளிவாயலை கட்டி முடிப்பதற்கு எங்களுக்கு உதவிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். அல்ஹம்துலில்லாஹ். அடுத்ததாக இந்த இடத்தினில் இப்பள்ளிவாயல் அமைவதற்கு உதவிய மஹாவலி அதிகாரிகளுக்கும், கடவத்தமடு பன்சல தேரருக்கும் ஏனைய அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் நாம் இவ்வேளையில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அல்ஹாஜ் ஹிஸ்புல்லா.
மேற்படி நிகழ்வில் காத்தான்குடி காழி நீதிபதி அல்ஹாஜ் அலியார் (பலாஹி) கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் உட்பட காத்தான்குடி, கதுருவெல, ஏறாவர், ஓட்டமாவடி, வாழைச்சேனையைச் சேர்ந்த உலமாக்கள், அதிகாரிகள், பொது மக்கள் எனபலரும் கலந்து கொண்டனர். சுமார் 1500 பேருக்கு பகல் போசன ஏற்பாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
Leave a comment