இலங்கை தீவானது இந்துசமூத்திரத்தின் இயற்க்கை வனப்புகள் செறிந்து காணப்படும் ஒரு அழகிய தீவாகும். இயற்க்கை வளங்கள் மற்றும் பௌதீக காரணிகளினால் ஆசிய கண்டத்தில் சிறப்பு பெற்று விளங்கும் ஒரு சுயாதீனமான நாடுதான் இலங்கை. பண்டை காலம் முதல் வர்த்தகத்திற்கு பெயர்பெற்று விளங்கிய எமது நாடு இயற்க்கைத்துறைமுகங்களை கொண்டதும் தேயிலை மற்றும் வாசனைத்திரவியங்களுக்கு பெயர் பெற்ற நாடாகும் இதன் காரணத்தினால்தான் அரேபிய வர்த்தகர்களும் ஏனைய வர்த்தகர்களும் இதனை இந்து சமுத்திரத்தின் நித்திலம், முத்து, சொற்காபுரி என்று அழைத்தனர்.
அதுமாத்திரமல்லாமல் இதன் அமைவிடம் ஆசிய பிராந்தியத்தையே கட்டுக்கோப்புக்குள் வைத்துக்கொள்ளக் கூடிய கேந்திர நிலையமாக இருந்தமையினால் போர்த்துகீசர் தொடக்கம் ஆங்கிலேயர் வரை படையெடுத்து வந்து எமது நாட்டை கைப்பற்றி ஆட்சி புரிந்து வந்தனர். இக்காலத்தில் கூட இந்தியா, சீனா தொடக்கம் அமெரிக்கா வரையில் தனது கழுகுக் கண்களை எமது நாட்டை சுற்றி நோட்டம் இட்ட வண்ணமே இருக்கின்றன இது யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை இந்த நிலையில்.
எமது நாட்டில் ஒரு தாய் மக்களாக பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்களை பின்மற்றும் இனக்குழுக்கள் வாழ்ந்து வருகின்றபோதிலும் பெரும்பான்மையாக பௌத்த சமயத்தை பின்பற்றும் சிங்கள இன மக்களே வாழ்ந்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கதாகும். இதுவரைகாலமும் எமது முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக சிறு சிறு பிணக்குகள் கருத்து முறுகல்கள் தோன்றி இருந்த போதிலும் பாரியதொரு எதிர்ப்பு நடவடிக்கையோஇ இனச்சுத்திகரிப்போ அல்லது காழ்ப்புணர்ச்சியோ குறிப்பாக எமது முஸ்லிம் சமூகத்தின் மேல் ஏனைய சமூகத்தவர்களால் அதுவும் குறிப்பாக பௌத்த இனத்தினரால் மேற்க்கொள்ளப்பட்டதில்லை.இனப்பிரச்சினையின் உச்ச கட்டமான தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் யாழ்ப்பாண குடாநாட்டில் இருந்து இரவோடிரவாக எமது முஸ்லிம் உடன்பிறப்புகள் விடுதலைப்புலிகளால் துரத்தியடிக்கப்பட்டதும் எமது சமூகத்தின் சொத்துக்கள் அனைத்தும் சூறையாடப்பட்டதும் வரலாற்றில் என்றும் மறக்கமுடியாத துர்ப்பாக்கியமான சம்பவமாகும். அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் ஏறாவூர் மற்றும் காத்தான்குடி இன்னும் சில முஸ்லிம் ஊர்களில் விடுதலைபுலிகளால் எமது முஸ்லிம் சகோதர சகோதரிகள் உயிர் மற்றும் உடைமைகள் காவு வாங்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களும் எம் மனதினில் ஆறாகாயமாக இடம்பிடித்துள்ளன. இது ஒருபுறம் தமிழ் விடுதலைப் புலிகளால் நிகத்தப்பட்ட சம்பவமாகும் அதேநேரம் தற்ப்போதயநிலையில் பௌத்த பேரினவாதிகள் அரங்கேற்ற இருக்கும் சம்பவங்கள் எம் மனதை கிலி கொள்ளச்செய்கின்றது. இது மற்றுமொரு இனப்பிரச்சினையை தோற்றுவிக்குமோ என எண்ணத் தோன்றுகின்றது.
முப்பது வருட கால கொடூர யுத்தம் நிறைவடைந்த இத்தருணத்தில் பௌத்த அடிவருடிகளினதும் பேரினவாதிகளினதும் கழுகுக் கண்கள் எம் சமூகத்தை நோக்கி திரும்பி இருப்பதன் காரணம் யாதாக இருக்க முடியும் யாரும் சிந்தித்த துண்டா? நிச்சயமாக இல்லை.
எமது முஸ்லிம் சமூகம் அரசியல்இகல்விஇபொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரத்தில் இலங்கையில் ஏனைய சமூகத்தினரைவிட முன்னேறி இருப்பதனால் பேரினவாதிகளின் சூழ்ச்சி மூலம் எமது சமூகத்தை அடக்குமுறைகள் மூலம் பேரினவாதிகளின் பெறாமை மற்றும் காழ்ப்புணர்ச்சிகளை உட புகுத்துவதன் மூலமும் பழிவாங்கல்களை மேற்கொண்டு எமது சமூக இருப்பையும் எமது சமூகத்தின் எதிகால உயர்வுமிக்க அடைவுகளையும் சிதைப்பதே இவர்களின் நோக்கமாகும்.
அதன் முதற்கட்டமாக தம்புள்ளையில் இருந்து பள்ளிவாசல் உடைப்பின் ஊடாக ஆரம்பமாகி பின்னர் ஏனைய சிறு சிறு பள்ளிவாசல்கள் ஏனைய குரான் மதரசாக்கள் உடைப்புகள் என்று தொடர்ந்த வண்ணமே உள்ளது அதுமாத்திரமல்லாமல் ஹலால் உணவு முறை தொடர்பாக எழுந்த பிரச்சினை, முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் தொடர்பான பிரச்சினை அடுத்து தற்போது மாடறுத்தல் தடை ஏன்று ஒவ்வொரும் முஸ்லிம்களின் அன்றாட நடைமுறைகளை நோக்கியே இந்த பேரினவாத சக்திகளின் சூழ்ச்சிகள் நாளுக்கு நாள் வெகு வேகமாக பரிணாமித்துக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இதை எவ்வாறு தவிர்ப்பது அல்லது எவ்வாறு இவ்வாறான சதிகார கும்பல் களிடமிருந்து பாதுகாப்பு பெறுவது அல்லது நமது முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பது….???
இலங்கைத்தீவின் சனத்தொகைப் பரம்பலை பொருத்தமட்டில் கிட்டத்தட்ட 10 மூ வீதம் மாத்திரம் உடைய முஸ்லிம் சமூகம் அதாவது கிட்டத்தட்ட இருபத்தி ஒரு இலட்சம் (2இ100இ000) மார்க்க ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல்வேறு பட்ட குழுக்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதன் விளைவே இதுவாகும் ஒற்றுமை மற்றும் வலிமை இழந்த சமூக அமைப்பினால் எமது முஸ்லிம் சமூகம் பேரினவாதிகளினால் காவுவங்க இலகுவாக ஆக்கப்படுள்ளது. இதன் காரணத்தினால்தான் எமது சமூகத்துக்கு எதிராக பௌத்த அடிவருடிகளினாளும் ஏனைய மதவாத அமைப்புகளினாலும் பல்வேறுபட் பழிவாங்கல் மற்றும் அக்கிரமங்கள் நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய எமது இலங்கை திருநாட்டில் முஸ்லிம் சமூகம் கொள்கை மற்றும் மார்க்க ரீதியாக பிளவடைந்தன் நிலையில் உள்ளதினால் ஏனைய பேரினவாத சக்திகளுக்கு வாய்ப்பு கொடுத்த நிலை ஆகிவிட்டது வெறும் இருபது இலட்சம் முஸ்லிம் சனத்தொகையை உடைய இலங்கை திருநாட்டில் இருபதுக்கு மேற்ப்பட்ட முஸ்லிம் மார்க்க குழுக்கள் இருக்கின்றன. ஒன்றுக்கொன்று போட்டி பெறாமை ஏனைய பழிவாங்கல் நடைமுறைகள் தான் பின்பற்றுவதுதான் சரி என்ற வாத பிரதிவாதங்களின் மூலம் தமக்குத்தானே தலையில் மண் அள்ளிப்போட்டுக்கொண்டு உள்ளனர் மார்க்கத்தை கற்றறிந்த உலமாக்களோ சுயநலவாதிகளின் முன்னோடியாக கூலிக்கு மாறடிக்கின்றனர் இதன் காரணத்தினால் எமது சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக சின்னா பின்னமடையத்தொடங்கி பிரிவினைவாதிகளினாலும் ஏனைய பேரினவாத சக்திகளினதும் காழ்ப்புணர்ச்சிக்கு உடபடுத்தப்பட்டுவிட்டது. இதற்கெல்லாம் காரண கர்த்தாக்கள் யார்..? சிந்திக்கவேண்டாமா?
முன்னைய காலங்களில் அகில இலங்கை உலமா சபை என்ற அமைப்பு எமது முஸ்லிம் சமூகத்தின் இருப்பை பாதுகாப்பதற்குரிய அமைப்பாக தொழில்பட்டு வந்தது ஆனால் இன்றய காலத்தில் அது தனது தான் தோன்றித்தனமான செயர்ப்படின் மூலம் குறிப்பிட்ட ஒரு மார்க்க பிரிவின் ஆதிக்கம் மற்றும் முன்னுரிமை சார்ந்த செயர்ப்படுகளின் மூலமும் ஏனைய மார்க்கப்பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கமால் தான்தோன்றித்தனமாக செயற்ப்படுகின்றது. அதுமாத்திரமல்லாமல் அடிக்கடி எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கித்தவிப்பது கேலிக்குரிய விடயமாக இருக்கின்றது.மக்களை ஒருநிலைப்படுத்த சகல மார்க்க பிரிவுகளையும் ஓன்று சேர்ந்த உலமாக்களினால் உண்டாக்கப்பட்ட இவ் அமைப்பானது சமூகத்தை பிளவுபடுத்துவதில் முன்னோடியாக இருப்பது வேதனைக்குரியவிடயமாகும்.
அடுத்தது அரசியலினால் எமது சமூகம் அழிவுப்பாதையை நோக்கிப் பயணிப்பதை நன்கறியலாம். இன்றைய நிலையில் அரசியல் மூலம் எமது சமூகம் சுக்கு நூறாக பிளவடைந்து காணப்படுவது வேதனைபயக்கும் விடயமாகும். இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்தும் குறிப்பாக தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் அதற்க்கு முன்னரும் இலங்கை ஜனநாயக குடியரசில் எந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த ஆட்சியில் முஸ்லிம்களின் பிரநிதியாகவும் பொறுப்பு வாய்ந்த அமைச்சுப் பதவிகளிலும் முஸ்லிம் தலைவர்கள் இருந்து வந்துள்ளனர் குறிப்பிடத்தக்கதாகும் ரீ.பி.ஜாயா தொடக்கம் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் வரையில் சக்திமிக்க அமைச்சுப்பதவிகளில் அங்கம் வகித்த முஸ்லிம் தலைமைகள் குறிப்பிடத்தக்கதாகும். இந்தசமயத்தில் முஸ்லிம் கல்வியின் உயர்ச்சிக்காக பாடுபட்ட முன்னாள் கல்வி அமைச்சர் அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் நினைவு கூரத்தக்கவராவர்.
குறிப்பாக சொல்லப்போனால் இலங்கை அரசியலில் அமைந்த அரசாங்கங்களின் வரிசையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலம் இலங்கை முஸ்லிம்களுக்கு பொற்காலம் என குறிப்பிட்டால் அது மிகையாகாது ஏனெனில் எமது முஸ்லிம் சமூகத்துக்கான சரியான அங்கீகாரம் வழங்கியது ஐக்கியதேசிய கட்சி அரசாங்கமே காரணம் இல்லாமலும் இல்லை ஏ.சி.எஸ்.ஹமீத் தொடங்கி ஏ.ஆர். மன்சூர் வரையில் எத்தனை எத்தனையோ சக்தி மிக்க அமைச்சர்கள் பாராளுமன்ற பிரதிநிதிகளை முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கியது ஐக்கிய தேசிய கட்சியே அதுமாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கென்று முஸ்லிம் விவகார அமைச்சு என்று தனி அமைச்சு ஒன்றை ஏப்படுத்தி முஸ்லிம்களின் ஏதிர் கால இஸ்த்திரத்தன்மையையும் இருப்பையும் முஸ்லிம் களின் முக்கியத்துவத்தையும் உலகறியச்செய்தது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமே அது ஒரு புறமிருக்க.
இன்றைய நிலையில் முஸ்லிம் அரசியல் வாதிகளும் அமைச்சர்களும் அரசாங்கத்தின் ஊது குழல்லாக எடுப்பார் கைப்பிள்ளையாக தொளில்படுவதன் காரணம் என்னவாக இருக்கும் யாராவது சிந்தித்த துண்டா?
1990 களின் ஆரம்பத்தில் இலங்கை தீவில் ஏற்ப்பட்ட இனப்பிரச்சினையானது எமது முஸ்லிம் சமூகத்து தேவையான தனியான சமூக மற்றும் அரசியல் அங்கீகாரத்தை ஏற்ப்படுத்தவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. இந்தசந்தர்ப்பதில் தமிழர் விடுதலைக்கூட்டனியில் இணைந்திருத்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களுக்கு முஸ்லிம் சமூகத்தை ஒன்றினைக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்தியதன் விளைவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியின் தோற்றமாகும். புலிப்பயங்கரவாதத்தின் மூலம் சிதைத்து சின்னபின்னமாக்கப்பட்ட எமது சமூகத்தின் இருப்பை தக்க வைத்துக்கொள்ள தனி அரசியல் அங்கீகாரம் பொருந்திய செல்வாக்கு மிக்க மக்கள் சக்தி முஸ்லிம் சமூகத்துக்கு தேவை என்பதை உணர்ந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் தனது அயராத முயற்ச்சியின் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தார். அதுவரையில் இலங்கை முஸ்லிம்களுக்கு என்று தனியான எந்த ஒரு அரசியல் அடையாளமும் இருக்கவில்லை மாறாக முஸ்லிம்கள் பேரினவாத கட்சிகளுடனையே சேர்ந்து தமது அரசியல் சேவைகளை செய்து வந்தனர்.இலங்கை தீவில் இனப்பிரச்சினை உக்கிரமடைந்த நிலையில் முஸ்லிம் சமூகத்தின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள போராடவேண்டிய சூழ்நிலை முஸ்லிம்களுக்கு ஏற்ப்பட்டது அதை நிபர்த்தி செய்வதற்காகத்தான் முஸ்லிம் காங்கிராஸ் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தது யாவரும் அறிந்த தொன்றாகும்.
1994 ம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோஷலிச குடியசின் ஆட்சியை தீர்மானிக்கக்கூடிய வலிமை பொருந்திய கட்சியாக முஸ்லிம்காங்கிராஸ் வளர்ச்சியடைந்ததை அவதானித்த பேரினவாதிகள் தமது காழ்ப்புணர்ச்சியை முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக திருப்ப நினைத்தனர் பின்னாளில் அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சி ஒரு சொற்ப காலத்தில் ஏனைய கட்சிகளுக்கு சவாலாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் இருந்தாலும் இது கூடிய காலத்துக்கு நீடிக்கவில்லை என்பது துரதிஸ்டவசமான தொன்றாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அல்ஹாஜ் ஏம.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் அகால மரணத்தின் பிற்ப்பாடு சுயநலவாதிகளின் கூடாரமாக மாறிய முஸ்லிம்காங்கிராஸ் இன்று சின்னாபின்னமடைந்து அதில் அங்கம் வகித்த ஒவ்வொருவரும் தங்களுக்கு என்று தனித்தனியே சொந்த கட்சிகளை அமைத்துக்கொண்டு வெளியேறியதன் காரணமாக வலுவிழந்து காணப்படுவது வரலாறாகும்.உதாரணத்துக்கு சொல்லுவோமாகயானால் முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற தற்போதைய அமைச்சர் அதாவுல்லா தேசிய முஸ்லிம்காங்கிராஸ் என்றும் அதேபோல் அமைச்சர் ரிசாத் அகில இலங்கை முஸ்லிம் கட்சியென்றும் முன்னர் பிரிந்து சென்று தற்போது இணைத்துள்ள ஹாபீஸ் நசீர் அகமத் தனக்காக ஒருகட்சியையும் இன்னும் சொல்லப்போனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் அஸ்ரப் இனால் தேசிய அரசியலுக்காக உருவாக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணி எனும் கட்சியை அவரது மனைவி பேரியல் அஸ்ரப் போன்றவர்கள் கூறு போட்டதினால் முஸ்லிம் சமூகம் அரசியலின் பால் வேறுபட்டு ஒற்றுமை இழந்து காணப்படுகின்றது யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத வரலாற்று உண்மையாகும்.
சிந்திக்கவேண்டிய விடயம் ஓன்று உள்ளது..!
சுயநலன்களுக்காக முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற இந்த கயவர்கள் கூட்டம் தங்களது அரசியல் இலாபத்தை அடைவதற்காகவும் ஏனைய வசதி வாய்ப்புகள் கொந்துராத்துகளுக்காகவும் அரசாங்கத்துடன் இணைத்துள்ளது கேலிக்குரிய விடயமாகும்.முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற ஏனயவர்களினால் உருவாக்கப்பட்ட கட்சிகளும் அதன் பிரதிநிதிகளும் இன்றைய அரசாங்கத்துடன் ஏன் சேர்ந்துள்ளனர் என்பது உன்னிப்பாக அவதானிக்கப்படவேண்டிய விடயமாகும். இதற்க்கு இவர்கள் சொல்லும் விளக்கம் அரசாங்கத்துடன் இருந்தால்தான் மக்கள் அபிவிருத்தி மற்றும் நலன் பேணமுடியும் என்பதாகும். ஆனால் இது மக்களுக்காக அல்ல இவர்களின் சுயநல பதவி பரிவாரங்களுக்காகதான் என்பதை எல்லாம் வல்ல இறைவன் நன்கறிவான்.ஆனால் இன்றைய நிலையில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக இத்தனை சதி முயற்ச்சிகள் பழிவாங்கல் சம்பவங்கள் இலங்கை முழுவதும் பொது பல சேனாஇ இரவாய இன்னும் ஏனைய பேரினவாத சக்திகளினால் அரங்கேறிவரும் சமயம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இவர்கள் அதற்க்கு எதிராக குரல் கொடுக்காததன் சூட்சுமம்தான் என்ன?
பதவி அந்தஸ்த்து பறிபோய்விடுமோ என்றபயமா?அல்ல மக்களை காவுவாங்க ஏனையோருடன் செய்துகொண்ட கூடுச்சதி ஒப்பந்தமா? ஒன்றுமே புரியவில்லை இவர்களின் மௌனம் பல்வேறு சிந்தனைகளையும் கேள்விகளையும் எம்முன் தோற்று விக்கின்றது. தற்போதைய நிலையில் முஸ்லிம்களை பிரதி நிதித்துவப்படுத்தும் அத்தனை முஸ்லிம் கட்சி தலைமைகளும் அரசாங்கத்துடந்தான் இணைந்து இருக்கின்றன என்பது சிந்திக்கவேண்டிய விடயம்.
இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்காக செய்த நன்மைகள் சாதனைகள் என்ன? எதுவுமே இல்லை எமக்கென்று இருந்த முஸ்லிம் கலாச்சார விவகார அமைச்சை பறித்ததுஇஇன்றைய தேதிவரையில் நடைபெறும் ஹாலால் மற்றும் பள்ளிவாசல் உடைப்புகள் மற்றும் முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பாக ஏற்ப்பட்டுள்ள சர்ச்சைகளை கண்டும்கானது விட்டுவிட்டு இருப்பது. இன்னும் எத்தை எத்தனையோ குறிப்பிடலாம். பயங்கரவாதத்தை பூண்டோடு அழித்த இந்த அரசாங்கத்துக்கு ஒரு சமூகத்துக்கு எதிராக பேரினவாதிகளினால் ஏற்ப்படுத்தப் பட்டிருக்கும் சின்ன பிரச்சினையான காவியுடைப்பயங்கரவாதத்தை அழிப்பது பெரும் விடயமா? சற்று சிந்தித்து பார்க்கவேண்டாமா?
எல்லாமே திட்டமிடப்பட்ட ஒரு காழ்ப்புணர்வு நடவடிக்கையாகும் இதை விமர்சிப்பதற்கும் எதிர்ப்பதற்கும் எமது வாக்குகளைப்பெற்று அரியாசனம் அமர்ந்து இருக்கும் இந்த நயவஞ்சக அரசியல் தலைமைகள் பின்வாங்கி பதுங்குவதர்க்கான காரணம் தான் என்னவோ..!! எதுவுமே புரியவில்லை. சூழ்ச்சிக்காரர்களுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரன் அல்லாஹ்தான் அவன் யாவற்றையும் நன்கரிந்தவனாவான்.
எமது சமூக இருப்பை தக்கவைத்துக்கொள்ள ஒவ்வொரு இலங்கை வாழ் முஸ்லிம்களும் தனித்தனியே போராடவேண்டிய சந்தர்ப்பம் இன்றைய சூழ்நிலையில் உருவாகியுள்ளது இனிமேலும் சுயநலவாத அரசியல் விசமிகளை நம்பி எந்த ஒரு பலனும் இல்லை இனிமேலும் கிடைக்கப்போவதும் இல்லை பிரார்த்தனைகளை அதிகப்படுத்தவேண்டிய தருணம் கேடுகெட்ட அரசியல் தலைமைகளில் இருந்து முதலில் நாம் பாதுகாப்பு பெறவேண்டும்.பின்னர் பேரினவதிகளிளிருந்தும் ஏனைய விசமிகளிடமிருந்தும் பாதுகாப்பு பெறலாம். நாம் மார்க்கத்துக்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்டு ஒற்றுமையாக செயல் படவேண்டிய அவசியமிக்க தருணம் ஆகும் இலங்கைத்தீவில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் ஒற்றுமையுடன் ஒன்றுபடவேண்டியது காலத்தின் தேவையாகும். சிந்தித்து செயல் படுவோம் சகோதரர்களே எல்லாம் வல்ல இறைவன் எமது சமூகத்துக்கு துணையிருப்பான்.
இத்தருணத்தில் எம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகளுக்காக நினைவுகொள்ளவேண்டிய சந்தர்ப்பத்துக்குரிய நபி மொழிகள் இதுவாகும்.
ஆட்சி பதவி என்பது ஒரு அமானிதம்!
ஹஜ்ரத் அபூதர் (ரலி) கூறுகிறார்கள்:நான் யாரசூல்லல்லாஹ் ! தாங்கள் என்னை (ஏதாவதொரு பகுதிக்கு )ஆட்ச்சிப் பதவியில் நியமனம் செய்யக் கூடாதா? என்று கேட்டேன் அதற்க்கு அண்ணலார் இதங்கள் கரத்தால் என் தோல்புஜத்தில் அடித்து விட்டுப் பின்னர் கூறினார்கள்: ஓ அபூதர்ரே! நிச்சயமாக ஆட்ச்சிப் பதவி என்பது ஒரு அமானிதம் (நம்பிக்கைக்குரிய பொறுப்பு)ஆகும். (உலகில் அதற்க்கு அதிக மதிப்பு இருந்தபோதிலும்)கியாமத் நாளில் அது இழிவு இகைசேதம் ஆகும் ;யார் அதனை அதன் உரிமையைக் கொண்டு எடுத்து .பின்னர் அதில் தன் மீதுள்ள கடைமைகளை (சரிவர)நிறைவேற்றினார்களோ அவர்களுக்குத் தவிர (முஸ்லிம்)அண்ணல் நபி (ஸல்) நவின்றதாக ஹஜ்ரத் அபூஹுர்ரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் :(தோழர்களே)வருங்காலத்தில் நீங்கள் தலைமைப் பதவியை ஆசைப்படிவீர்கள்!(ஆனால்) அது கியாமத் நாளில் கைசேதமாகும் . (புகாரி)
எல்லாம் வல்ல இறைவா நீ யாவற்றையும் நன்கரிந்தவனாவாய் தனது சுய இலாபத்திற்காக எமது முஸ்லிம் சமூகத்தை அடகுவைத்து பிழைப்பு நடத்தும் ஆட்சியாளர்களிளிருந்து எமது சமூகத்தை பாதுகாத்து அருள் புரிவாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
அல்ஹம்துல்லில்லாஹ் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே..!!
Published by

Leave a comment