கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார். இந்தியாவுடனானா நல்லெண்ண நடவடிக்கையாகவே ஜனாதிபதி இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் ஏ.எப்.பி செய்தித்தாபனத்திடம் தெரிவித்துள்ளார்.
எத்தனை மீனவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர் என்பது இதுவரை தெரியவரவில்லை எனினும் டசின் கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது உள்ளூர் ஊடகங்களின் மூலம் தெரியவருகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வாக்கெடுப்பில் விலகி இருந்தமைக்கு நன்றி தெரிவிக்கும் சமிக்கையாக இது கவனிக்கப்படுகின்றது
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கான வாக்கெடுப்பின்போது இந்தியா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment