காத்தான்குடியில் மர ஆலையொன்று தீக்கிரை – விமானப்படையின் தீயணைப்புப் பிரிவின் உதவியோடு வேகமாகப் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

unnamed (3)பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ்; விளையாட்டு அரங்கிற்கு அருகாமையில் அட்வேகட் அப்துல் காதர் மாவத்தையில் அமைந்துள்ள றபீக் மர ஆலை 28-03-2013 இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தீப்பற்றி எரிந்துள்ளது.

இன்று அதிகாலை 01:30 மணிக்கு ஏற்பட்ட இத்தீவிபத்தை நேரில் கண்ட அப்பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பொலீசாருக்கும் மர ஆலையின் உரிமையாளருக்கும் வழங்கிய தகவலை அடுத்து மட்டக்களப்பு விமானப்படையின் தீயணைப்புப் பிரிவு மற்றும் காத்தான்குடி பொலிஸ் ஆகியோரின் உதவியோடு வேகமாகப் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இருந்த போதிலும் மர ஆலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றும் மரம் அறுக்கப் பயன்படுத்தும் மின்சார இயந்திரங்கள் உட்பட பல இலட்சக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியுள்ள மரப் பலகைகள் மற்றும் தளபாடங்களும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.

இத்தீ விபத்துக்கான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்காத நிலையில் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இத் தீ விபத்தில் இப்பகுதியிலுள்ள தொலைத் தொடர்பு கம்பங்களில் பரவிய தீயால் இப்பகுதயில் தற்காலிகமாக தொலைத் தொடர்பு இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் துண்டிக்கப்பட்ட தொலைத் தொடர்பு இணைப்பை அவசரமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ‘லங்கா டெலிகோம் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment