கொழும்பு: நமது வாழ்க்கைக்கு அர்த்தம் ஏற்படுத்தும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தல் எனும் தொனிப்பொருளில் பயிற்சிப் பட்டறை ஒன்று இன்று (27) மீள்குடியேற்ற அமைச்சின் செயளாலர் ஜனக சுகததாச தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது மனோதத்துவ பயிற்சியாளர் சந்தன குணவர்தன விரிவுரை நிகழ்த்தினார். எம்மால் செய்ய முடியாதது எதுவுமில்லை, நாம் எதற்கும் தயார், எம்மால் முடியும், என்ற நாமங்களை தினம் தினம் உச்சரிக்கும் போது நாம் ஒருநிலைக்கு திரும்ப முடியும். இதன் மூலம் எமது அறிவு,திறன், மனோபாவம் என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மாற்றம் என்பது நமது அடிமனதில் இருந்து தோற்றம் பெற வேண்டும்.
காலையில் எழுந்தோம் வேலைக்கு சென்றோம், மாலையில் வீடுதிரும்புகிறோம் என்றில்லாமல் நான் தற்போது என்ன வேலை செய்கின்றேன். இன்னும் சில வருடங்களின் பிற்பாடு எந்த நிலைக்கு உயர வேண்டும். அதன் மூலம் எனக்கும் என்னுடைய குடும்பத்திற்கும் நாட்டிற்கும் எந்த நலவை என்னால் செய்ய முடியும் அந்த இலக்கினை அடைய நான் என்ன முயற்சி எடுக்க வேண்டும் அதற்கான முயற்சியை இன்றிலிருந்து ஆரம்பிக்கின்றேன். என்ற உறுதியை நாம் ஒவ்வொருவரும் நமக்குள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
சாதனையாளர்களின் வரலாறுகளை படித்தால் ஆரம்ப வாழ்க்கை நம்மைவிட வறுமையில் மிகவும் மோசமானது. அவர்களின் சாதனையோ சிகரத்தை தொட்டுள்ளது. நம்மாலும் அந்த சிகரத்தை தொடமுடியும் என்ற உறுதியுடன் நம் வாழ்வை தொடங்குவோம். என மனோதத்துவப் பயிற்சியாளர் சந்தன குணவர்தன இதன் போது கருத்துத் தெரிவித்தார்.
ஏ.எல்.எம்.தாஹிர்
மீள்குடியேற்ற அமைச்சு
Published by

Leave a comment