-டீன் பைரூஸ்-
காத்தான்குடி: காத்தான்குடி வரலாற்றில் பொன் எழுத்துக்களாற் பொறிக்கப்பட வேண்டிய மாமனிதர் மர்ஹூம் அஷ்-ஷஹீத் அஹமத் லெப்பை ஹாஜியார். அன்னார் மறைந்து சுமார் 25 வருடங்கள் கடந்த விட்ட பின்னும் அன்னாரின் நினைவலைகள் இன்னும் எவருடைய மனதை விட்டும் நீங்க வில்லை என்பதுதான் யதார்த்தம்.
அல்லாஹ்வின் துனையுடன், அவனின் திருப்தியை மாத்திரம் இலக்காகக் கொண்டு காத்திரமான பணிகளை காத்தான்குடி மக்களுக்காகச் செய்த மகாத்மாதான் அஷ்-ஷஹீத் அஹமத் லெப்பை ஹாஜியார் அவர்கள். அன்னாரின் சிந்தனை பரந்து விரிந்து காணப்பட்டதன் வினைவுதான் முஸ்லிம்களுக்கான தனியான கட்சி ஒன்று அவசியம் தேவை என்ற சிந்தனை, அதுதான் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அன்னார் ஆளுமைமிக்க ஓர் இளம் அரசியல் தலைவர் மாத்திரமின்றி காத்தான்குடி பட்டினாட்சி மன்ற தலைவராக இருந்து சேவைகள் செய்த செம்மல்.
வைத்தியசாலைகள், பள்ளிவாயல்கள், பாடசாலைகள், அரபு மதரசாக்கள், வர்த்தக சங்கம், வாசகர் மன்றம்,குர்ஆன் மதரசாக்கள்,கல்வி அபிவிருத்தி, சமாதான இனக்க சபை,உலமா சபை,மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் நலவுரிமைகளை பாதுகாக்கஉழைத்தமை போன்ற இன்னோரன்ன கணிசமான பணிகளை சமூகத்திற்காக சேவை செய்து தன் உயிரையே இறை பாதையில் உயிர் நீத்த உத்தம மனிதனின் வரலாற்றுப் பதிவுகளைத்தான் ‘வாழ்வும் பணியும்’ எனும் பெயரினில் நூலாக வெளியிட உள்ளனர் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்களின் சம்மேளனம்.
காலம்: 28.03.2014 (வெள்ளிக்கிழமை) பி.ப.06.30 மணி
இடம்: காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபம்.
தலைமை: அல்ஹாஜ். MTM . காலித்(தலைவர்-கா-ப-மு-நி-ம்மேளனம் காத்தான்குடி)
பிரதம அதிதி: அல்ஹாஜ்.MLAM .ஹிஸ்புல்லாஹ் MA/MP
நூல் நயவுரை: கலாநிதி றமீஸ்அப்துல்லா (தென்கிழக்கு பல்கலைக் கழகம்)
நினைவுச் சொற்பொழிவு: கவிமணி MHM. புஹாரி (பலாஹி) BA
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப் போமாக!
Published by

Leave a comment