உன்னிச்சை: மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தின் பள்ளிவாயலுக்கு வரலாற்றில் முதற்தடவையாக மின்சாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 23 -03-2014 கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
இதன் போது சமூகசேவையாளரும், உன்னிச்சை இருநூறுவில் முஸ்லிம் நலன்புரிச்சங்க ஆலோசகருமான இல்மி அஹமட் லெவ்வை, முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் நிர்வாகிகள் ,பிரதேச மக்கள் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் பள்ளிவாயலுக்கான மின்சார சேவைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப் பள்ளியாலுக்கு மின்சாரம் கிடைபெற்ற விடயம் தொடர்பாக உன்னிச்சை இருநூறுவில் முஸ்லிம் நலன்புரிச்சங்க ஆலோசகர் இல்மி அஹமட் லெவ்வை கருத்து தெரிவிக்கையில்
மட்டக்களப்பு மாவட்ட வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் முஸ்லிம் மக்கள் பூர்வீக குடிகளாக வாழ்ந்து வந்தார்கள் இங்கே இப் பள்ளிவாயல் முகைதீன் ஜூம் ஆப்பள்ளிவாயல் என்ற பெயரில் இயங்கி வந்தது.
1985ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கரவாத அசாதரண சூழ்நிலையால் அங்கு வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பள்ளிவாயலும் தாக்கப்பட்டிருந்தது யுத்தத்தின் பின்னரான காலத்தில் இப்பிரதேசத்து முஸ்லிம் மக்களின் முயற்சியினால் தகரக் கொட்டகையாக புனர்நிர்மானம் செய்யப்பட்டது
இலங்கைத் திருநாடு சுதந்திரம் அடைந்த காலமுதல் இதுவரையும் இக்கிராமத்து மக்கள் மின் ஒளியினது சௌகரீகத்தினை அனுபவித்ததே கிடையாது .
இவ்வாறு பல வருடங்கள் உருண்டோடினாலும் இக்கிராமத்தினது மக்கள் இன்று வரையும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலயே காணப்படுகிறார்கள் இதற்காகன பிரதானமான காரணம்,இவர்கள் எலலோருமே விவசாயிகள்
எங்களினது விவசாய நிலங்கள் மீண்டும் எமக்கு கிடைக்குமாக இருந்தால் அதுவே எமது வாழ்வுக்கான மறுமலர்சியாக அமையும் என்று மக்கள் அங்கலாய்ப்போடு வாழ்ந்து வரும் இச்சூழ்நிலையில் இருநூறுவில்
முஸ்லிம் நலன்புரிச்சங்கமும் பள்ளிவாயல் நிருவாகமும் இணைந்து எடுத்துக் கொண்ட அயராத முயற்சியின் பயனாக கடந்த 11.03.2014 திகதி அன்று மேற்படி பள்ளிவாயலுக்கு மின்சார இணைப்பு கிடைக்கப் பெற்றிருப்பது இப்பிதேசத்து முஸ்லிம் மக்களுக்கு பெரும் மகிழ்சியை ஏற்படுத்தி இருக்கிறது, என்றும் இதற்காக அதிமேதகு ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களுக்கும், மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் .பிரதேச செயலாளர் உற்பட அனைவருக்கும் இப்பிரதேச முஸ்லிம் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்ருவித்துக்கொள்கின்றேன்
இப்பள்ளிவாயலுக்கு இன்னும் பல்வேறு அடிப்படைத்தேவைகள் காணப்படுவதனால் அழ்ழாஹ்வினது இறை இல்லதுக்கு உதவுவதற்கு நலன்விரும்பிகள் முன்வரவேண்டும் எனவும் இல்மி அஹமட் வெல்வை மேலும் தெரிவித்தார்.
இங்கு இப்பள்ளிவாயலுக்கான புதிய நிருவாகிகள் தெரிவும் இடம்பெற்றது இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைப்கள கிழக்கு பிராந்திய பொறுப்பாளர் அஷ்ஷேய்க். ஜூனைட் நளீமி , முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர் அஷ்ஷேய்க் றிஸாத் மற்றும் பள்ளிவாயல் நிருவாகிகள் பிரதேச மக்கள் எல்லோரும் மிகவும் உற்சாகத்துடன் கலந்த கொண்டு சிறப்பித்தார்கள்.
Published by

Leave a comment