கல்முனை: கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன், உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸில் நேற்று (24.03.2014) மாலை லீ மெரீடியென் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ‘சாய்ந்தமருதிற்கென ஒரு தனியான உள்ளூராட்சி மன்றக்கோரிக்கை’ சமர்ப்பிக்கும் நிகழ்வின்போது இணைந்து கொண்டார்.
இதன்போது ‘கல்முனை மாநகர சபையில் உள்ள ஏனய கிராமங்களுக்கோ ஏனய சமூகங்களுக்கோ பாதிப்பு எழாவண்ணம் சாய்ந்தமருதிற்கான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்கித் தருவேன்’ என அமைச்சர் உறுதியளித்தார்.
பட விளக்கம்.
சாய்ந்தமருதில் நேற்று (24.03.2014) திங்கட்கிழமை மாலை லீ மெரீடியென் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சாய்ந்தமருதிற்கென ஒரு தனியான உள்ளூராட்சி மன்றக்கோரிக்கை’ சமர்ப்பிக்கும் நிகழ்வின்போது சிராஸ் மீராசாஹிப், அமைச்சர் அதாஉல்லாவை ஆரத்தழுவி பொன்னாடை போர்த்தி தேசிய காங்கிரஸில் இணைந்து கொள்வதையும், ஆதரவாளர்கள் அமர்ந்திருப்பதையும், சாய்ந்தமருதிற்கென ஒரு தனியான உள்ளூராட்சி மன்றக்கோரிக்கைக்கான மகஜரை அமைச்சரிடம் கையளிப்பதையும் படங்களில் காணலாம்.
Published by

Leave a comment