மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சம்மேளனம் உருவாவதையிட்டு மிகவும் சந்தோஷமடைகின்றேன் ஆனால் ஊடகவியளாளர்களாகிய நாங்கள் இன்னும் புரிந்துணர்வின்றியும் விட்டுக்கொடுப்பின்றியும் செயற்பட்டு வருகின்றோம் இந்நிலையிலிருந்து நாம் விடுபடவேண்டிய தேவை இன்று காணப்படுகிறது.
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின்; புதிதாக தெரிவுசெய்யப்பட்ட தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான டி.எல்.ஜவ்பர் கான் தெரிவித்தார்
நேற்று ஏறாவூரில் அங்குரார்ப்பணம் செய்து ஆரம்பித்து வைக்கப்பட்ட மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளன ஆரம்ப நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,ஊடக கலாச்சாரம் இன்று அனைத்து துறைகளிலும் மிகவும் முக்கிய ஒரு பங்காக திகழ்கின்ற அதேவேளை மிகப்பொறுப்பு வாய்ந்த ஊடகப்பணியினை நாம் செய்து வருகின்றோம் என்பதை யாரும் மறுக்க முடியாது ஆனால் ஊடகவியளாளர்களாகிய சிலர் தங்களுக்குள்ளே புரிந்துணர்வின்றி செயற்படுகின்றனர் இவர்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தவேண்டிய மிகப்பாரிய பொறுப்பு அமையப்பெற்றுள்ள மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்திற்குள்ளது என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்பகிறேன் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை உள்ளடக்கிய இந்த சம்மேளனம் எந்தவித கருத்துமுறண்பாடுகள் வந்தபோதிலும் ஊடகவியலாளன் தாக்கப்படும்போது சும்மா கைகட்டி வாய்மூடி மௌனியாக இருந்துவிடமுடியாது இதற்காக அந்த ஊடகவியலாளர் பக்கச்சார்பாகவும் ஊடக தர்மத்தினை மீறியும் செயற்படக்கூடாது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
காத்தான்குடியில் ஊடகவியலாளன் தாக்கப்பட்டபோது மெத்தைப்பள்ளிவாயலுக்கு முன்பாக கறுப்பு சீலை கட்டி கண்டனத்தினை வெளியிட்டோம் மற்றொரு ஊடகவியலாளரின் வீடு எரிக்கப்பட்டு தாக்கப்பட்டபோது அதனை தடுத்து நிறுத்த முயற்சியெடுத்தோம் மிகவும் உயிரைப்பணயம் வைத்து பல தியாகங்களுக்கும் சிரமங்களுக்கு மத்தியிலும் நானும் என்னைப்போன்ற ஊடகவியலாளர்களான எம்.எஸ்.எம்.நூர்தீன் ஏ.எச்.எ.ஹுசைன் எம்.ஐP.அப்துல் நாசர் போன்ற பலரும்; இன்றுவரை சமூகத்திற்காகவும் தங்களது உழைப்பிற்காகவும் பொறுப்புடன் செய்துவருகின்றனர் சபைக்கூட்டங்களின்போது சிலர் எங்களுக்கு கதிரையோ சிற்றுண்டியோ தர மறந்துவிடுவார்கள் அதனைக்கூட நாங்கள் பொருட்படுத்துவது கிடையாது ஆனால் ஒரு சமூகத்தின் தலைவிதியையே மாற்றக்கூடிய பாரிய பொறுப்பு எம் கையில் உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் இவ்வாறு தனதுரையில் தெரிவித்தார்
மேலும் பலரும் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.மேற்படி சம்மேளனத்தின் புதிய நிறுவாகிகளாக பின்வருவோர் ஏகமானதாக தெரிவுசெய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம் அங்குராப்பண வைபவமும் நிருவாகத்தெரிவும்
தலைவர் ரீ.எல். ஜவ்பர்கான் – (காத்தான்குடி)
செயலாளர் எம்.ரீ.எம். பாரிஸ் (ஓட்டமாவடி)
பொருளாளர் எம்.எச்.எம். ஹமீம் -(ஏறாவூர்)
உப தலைவர்கள்
01. எம். சுபைர் – (ஓட்டமாவடி)
02. எம்.ஜி. அப்துல் நாஸர் – (ஏறாவூர்)
உப செயலாளர்
எம்.ஏ.சீ.எம். ஜெலீஸ் – (காத்தான்குடி)
தகவல் பணிப்பாளர்
எஸ்.எம்.எம். முர்ஷித் – (வாழைச்சேனை)மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
பி.ரீ. அப்துல் லத்தீப் – (மட்டக்களப்பு கோட்டமுனை)
சமூக சேவை மற்றும் அங்கத்தவர் நலன்புரி நடவடிக்கை
ஏ.எச்.ஏ. ஹூஸைன் -(ஏறாவூர்)
கல்வி, கலாசாரம்
ஏ.எஸ்.எம். சதீக் – (ஓட்டமாவடி)
விளையாட்டு, பொழுது போக்கு
யு.எல்.எம். ஹரீஸ் (வாழைச்சேனை)
மகளிர் விவகாரம்
பதுர்தீன் ஜெஸ்மிலா பானு (வாழைச்சேனை)ஒழுக்காற்றுக் குழு
01. தலைவர்
ரீ.எல். ஜவ்பர்கான் (காத்தான்குடி)
02. செயலாளர்
எம்.ரீ.எம். பாரிஸ் (ஓட்டமாவடி)03. பொருளாளர்
எம்.எச்.எம். ஹமீம் – (ஏறாவூர்)
04. எம்.எஸ்.எம். நஸீர் ஹாஜி (ஏறாவூர்)
05. எம்.எப்.எம். பசால் ஜிப்ரி – (காத்தான்குடி)
06. எல்.டி பைறூஸ் – (காத்தான்குடி)
07. எம்.எஸ்.எம். நூர்தீன் – (காத்தான்குடி)
08. எச்.எம்.எப். சர்மிலா – (காத்தான்குடி)
09. பி.ஏ. அப்துல் லத்தீப் – (மட்டக்களப்பு கோட்டமுனை)யாப்புக் குழு
01. தலைவர் – ரீ.எல். ஜவ்பர்கான் -(காத்தான்குடி)
02. செயலாளர் – எம்.ரீ.எம். பாரிஸ் –
03.பொருளாளர் – எம்.எச்.எம். ஹமீம் –
04. ரீ.எம். மன்சூர் – (காத்தான்குடி)
05. யு.எல்.எம். ஹரீஸ் – (காத்தான்குடி)
06. எம்.எச்.எம். அன்வர் – (காத்தான்குடி)
07. எம்.எஸ்.எம். நூர்தீன் – (காத்தான்குடி)
08. யு.எல்.எம். சபீக் – (காத்தான்குடி)
09. ஜே.எப். காமிலா வேகம் – (வாழைச்சேனை)
10. ஏ.எச்.ஏ. ஹூஸைன் – (ஏறாவூர்)
11. பி.ஏ. அப்துல் லத்தீப் – (மட்டக்களப்பு கோட்டமுனை)
12. எம்.ஜி. அப்துல் நாஸர் – (ஏறாவூர்)
Published by








Leave a comment