மட்டு- பூநொச்சிமுனை முஸ்லிம் பகுதியில்- நாவற்குடா கிழக்கு புதிய குடியேற்ற சமூக மேம்பாட்டக்கான அமைப்பு அங்குரார்ப்பணம்

unnamed (1)பழுலுல்லாஹ் பர்ஹான்

 பூநொச்சிமுனை: மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு –கள்ளியங்காடு, முஸ்லிம் கொலனி பகுதியில் வாழ்ந்து 1990 ஆண்டு ஏற்ப்பட்ட பயங்கரவாதத்தாலும், இனக்கலவரத்தாலும் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு பூநொச்சிமுனை நாவற்குடா கிழக்குப் பகுதியில் புதிய மீள்குடியேற்றம் 1998ம் ஆண்டு இடம்பெற்று தற்போது 74 முஸ்லிம் குடும்பங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களின் நன்மை கருதி அப்பகுதி சில சகோதரர்களினால் மட்டக்களப்பு பூநொச்சிமுனை நாவற்குடா கிழக்குப் பகுதியில் (புதிய மீள்குடியேற்றம்) 6ஆம் குறுக்க சித்தீக் வீதியிலுள்ள ஒரு பன மரத்தில் அமையப்பெற்றுள்ள நாவற்குடா கிழக்கு புதிய குடியேற்ற சமூக மேம்பாட்டக்கான அமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு 21-03-2014 இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

இதன் போது பிரதம அதிதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கினால் புதிய குடியேற்ற சமூக மேம்பாட்டுக்கான அமைப்பின் பெயர்ப் பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டு அவ் அமைப்பு உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

புதிய குடியேற்ற சமூக மேம்பாட்டக்கான அமைப்பின் தலைவர் எம்.ஏ.சித்தீக் மற்றும் செயலாளர் ஓடாவியார் என்று எல்லோராலும் அழைக்கப்படும் உதுமாலெப்பை ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் ஸ்ரீ.ல.மு.கா உறுப்பினர் என்.கே.ரம்ளாள் கலந்து கொண்டார் சிறப்பு பூநொச்சிமுனை இக்றாஃ வித்தியாலயத்தின் அதிபர் ரசூல் கலந்து கொண்டதோடு அப்பிரதேசத்தில் வசிக்கும் ஆண்,பெண் குடும்ப உறுப்பினர்களும்,ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் என்னால் முடியுமான அளவு இந்த கிராம மக்களுக்கு எவ்வளவு அபிவிருத்திகள் செய்ய முடியுமொ அவ்வளவு அபிவிருத்திகளை தான் செய்து தருவதாக உறுதியளித்தார்.

இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கு அப்பகுதி பொது மக்களினால் பல்வேறு மஹஜர்கள் கையளிக்கப்பட்டது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment