டைட்டில் இல்லாத டைட்டானிக்

unnamedமதியன்பன்

இப்போதெல்லாம்

விடிந்ததும்

விபத்துச் செய்திகள்தான்

விலைவாசியை விட வேகமாய்

வீட்டுக்கு வருகிறது..

விபத்துக்கள்

எங்களை

விசாரித்து விட்டு வருவதில்லை

நாம்தான்

கவனத்தை கையாள வேண்டும்.

கடவுள் காப்பாற்றுவார்

என்றாலும்

ஓட்டுனர்களை நம்பித்தான்

ஓராயிரம் பேர்

உள்ளே

உட்கார்திருக்கிறார்கள்

கண்ணிமைக்கும் நேரத்தில்

அந்த

காட்சி முடிந்து விடும்

எண்ணிப் பார்ப்பதற்கு கூட

எமக்கு

எந்த வினாடியும்; இருக்காது.

ஒன்பதோஇ எண்பதோ

உருக்குலைந்தோ

அல்லது

உடல் கருகியோ போகலாம்

யாருக்குத் தெரியும்

அது

எப்போது எப்படி

எங்கே நடக்குமென்று…

நாம் மட்டுமல்ல

எங்களை நம்பி

ஏறியிருப்பவர்களையும்

எப்போதும்

காப்பற்ற வேண்டிய

கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஓட்டுனர்களே..!

பயணத்தில்..

தொலைபேசித் தொடர்புகளை

முற்றாக

துண்டித்துக் கொள்ளுங்கள்.

வீதி ஒழுங்குகளை

மீறாமல்

வாகனம் ஓட்டுதலை

வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

தூக்கத்திலும் போதையிலும்இ

உங்களை

துயர் கொண்ட வேளையிலும்.

ஓட்டும் வாகனத்தை

ஓரமாய் நிறுத்தி விடுங்கள்.

ஏட்டிக்குப் போட்டியாய்

வாகனமோட்டி

ஒருவரை ஒருவர்

முந்தும் பழக்கத்தை

முற்றாக நிறுத்திக் கொள்ளுங்கள்.

வேகப் பயணத்திற்கு

இனிமேல்

விடுதலை வழங்கி விடுங்கள்.

மஞ்சல் கோடுகளையும்

வேகத் தடைகளுக்கும்

நெஞ்சில் நிறுத்தி

பாதசாரிகளை

பயணம் செய்ய விடுங்கள்

ஓட்டும் கண்டிசனில்

வாகனம்

உள்ளதா என்பதை

உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அறைகுறை ஆடையுடன்

அலைந்து திரியும்

போதைப் பெண்களிடம்

உங்களின்

பயணப் பாதையினை

பறிகொடுத்து விடாதீர்கள்.

விளம்பரப் பலகைகளில்

வீற்றிருக்கும்

விலை மாதர்களிடம்

உங்கள் கண்களை

ஒப்படைத்து விடாதீர்கள்.

ஒவ்வொரு உயிரையும்

தன்னுயிராய்

தத்தெடுத்துக் கொள்ளுங்கள்.

பாதுகாப்பான பயணத்திற்கு

எப்போது

பாதையமைத்துக் கொள்ளுங்கள்

அதனை

பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்

Published by

Leave a comment