காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் மஸ்ஜிதுல் இர்ஷாத் பள்ளிவாயல் திறப்பு விழா

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்திலும் அதனை அண்டியுள்ள முஸ்லிம் பிரதேசங்களிலும் 1990 ஆம் ஆண்டு முதல் தஃவா வழிகாட்டல் கல்வி பயிற்றுவித்தல் மற்றும் மனிதாபிமான சேவைகள் சகவாழ்வுக்கான பிரிவுகளுடன் பல்வேறு பணிகளை அல்லாஹ்வின் பேருதவியினால் மேற்கொண்டுவரும் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய வளாகத்தில் 08-12-1997 முதல் செயற்பட்டு வந்து தற்போது புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள மஸ்ஜிதுல் இர்ஷாத் பள்ளிவாயல் திறப்பு விழா 21-03-2014 இன்று வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையுடன் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவரும், தென்கிழக்கு பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய கற்கை பீடத்தின் பீடாதிபதியுமான அஷ்ஷெய்க் எம் அலியார் றியாதி தலைமையில் இடம்பெற்ற இப் பள்ளிவாயல் திறப்பு விழாவில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் முக்கியஸ்தர்கள்,காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் பிரதிநிதிகள்,உலமாக்கள் ,ஊர் பிரமுகர்கள் புத்திஜீவிகள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இங்கு பள்ளிவாயல்களின் முக்கியத்துவம் தொடர்பில் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கவிமணி.எம்.எச்.எம்.புகாரி பலாஹியினால் விஷேட மார்க்க சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment