காத்தான்குடி குபா இளைஞர் விளையாட்டு கழகம் அறிமுகம்

kuba (2)– தொகுப்பு-பழுலுல்லாஹ் பாஸூல் பர்ஹான்

 காத்தான்குடி: காத்தான்குடி குபா இளைஞர் விளையாட்டு கழகத்தின் அடித்தளமானது காத்தான்குடி மட்-அல்ஹிறா மகா வித்தியாலயத்திலே 2004ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

பல்வேறு பக்கம் இருந்தும் வந்த மாணவர்கள் இப்பாடசாலையில் தரம் 06க்கு ஒன்று சேர்ந்தார்கள். எல்லோரையும் போன்று விளையாட்டினை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் ஒற்றுமை நட்பு என்பவை இக்க கழகத்திளை குறுகிய காலத்திலேயே பிரபல்யமான ஒரு இளைஞர் விளையாட்டு கழகமாக தலைதூக்கவைத்தது.

இவ்வாறு மாலை வேளையில் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டவர்களுக்கு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படுகின்ற போட்டிகளில் பங்குகொள்ள வேண்டும் எனும் ஆசையில் கடந்த 2008 ம் ஆண்டில் இக் கழகமானது ஒரு விளையாட்டு கழகமாக பதிவு செய்து கொண்டது. அது வரை காலமும் பெயரிடப்படாது இயங்கி வந்த இக் கழகம் குபா எனும் நாமத்தினையும் பெற்றது.

Kuba1

அதற்கு அடுத்த வருடமே 2009 இல் காத்தான்குடியில் எல்லே சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. இவ்வாறு வெற்றிகளை பெற்று சென்று கொண்டிருக்கும் வேலையில் இக் கழகம் சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்துவதற்கு 2010இல் தன்னை ஒரு இளைஞர் கழகமாக பதிவு செய்து கொண்டது.

அதிலிருந்து 2012,2013 ஆம் ஆண்டில் பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவில் சம்பியனாக தன்னை விளையாட்டு துறையில் முன்நிறுத்திக் கொண்டது அது மட்டுமல்லாமல் 2013 இல் இக் கழகம் நடாத்திய இரண்டு வௌ;வேறு கிரிக்கட் சுற்றுப்போட்டிகளில் சிறந்த துலங்களை காட்டியதுடன் காத்தான்குடி கிரிக்கட் ரசிகர்கள் மத்தியில் சிறந்த அபிமானத்தையும் பெற்றது.

இக் கழககத்தின்; சமூக சேவையினை பொறுத்தவரையில் தன்னிகரற்று விளங்கிறது. ஆவற்றில் சில.

kuba (2)

1 .2012,2013 ஆம் ஆண்டுகளில் காத்தான்குடியிலுள்ள சில பாடசாலைகளிலும்,கடற்கரையில் ஒரு சில பிரதேசத்தினையும் சிரமதானம் செய்தது.

2. கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களுக்காக 2012 ஆம் அண்டில் காத்தான்குடி அல் ஹிறா வித்தியாலயத்தில் ஆங்கில கல்விக் கருத்தரங்கினை இலசமாக நடாத்தியது.

3.காத்தான்குடி ஆற்றங்கரை பிரதேசம் ஒன்றினை தெரிவு செய்து கரப்பந்தாட்டம் வொலிபோல் விளையாடுவதற்கான மைதானம் ஒன்றினை நிறுவியது.

4.கடந்த 2013 ஆம் ஆண்டு இறுதியில் வறிய 100 பாடசாலை மாணவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு இலவசமாக பாதணிகளை வழங்கியது.

இவ்வாறு அளப்பெரிய சேவையினை சமூகத்திற்காக செய்த ஒரே ஒரு இளைஞர் கழகமாக குபா இளைஞர் கழகம் திகழ்கிறது என்றால் அது மறுக்கத்தக்க அல்ல.

2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் எமது கழகத்தினை சேரந்த எம்.எம்.சுஜாத் அஹமட் இளைஞர் பாராளுமன்றத்துக்கு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதும் இக் கழகத்திற்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது.

இதற்கு காரணம் கழக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை ,நட்பு,புரிந்துணர்வு மட்டுமே அன்றி வேறு ஒன்றும் இல்லை.

இக் கழகத்தின் பிரதிபளிப்பு விளையாட்டு,சமூக சேவை மட்டுமன்றி கல்வியிலும் கூட அதிக செல்வாக்கை செலுத்தி வருகின்றது.

kuba

காரணம் 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரிட்சையில் இக் கழகத்தினைச் சேர்ந்த 3 மாணவர்கள் பொறியியல் பிரிவுக்கும்,முகாமைத்துவம்,வர்த்தகப் பிரிவுக்கு 2 மாணவர்களும் கல்வியற் கல்லூரிக்கு 2 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றார்கள்.
தற்போது இக்கழகம் சுமார் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் மக்களின் நன்மதிப்பை பெற்று வெற்றி நடைபோட்டு வருகின்றது.

கழகத்தின் திறமைக்கு கிடைத்த வெற்றிக் கிண்ணங்கள்.

2010,2011,2013 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற காத்தான்குடிப் பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவில் எல்லே போட்டியில் முதலிடம் பெற்று சம்பியன் 2014 இவ்வருடம் 2 ஆம் இடம்.

2013 மற்றும் 2014 இவ்வருடம் இடம்பெற்ற காத்தான்குடிப் பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவிலும், காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட தேசிய விளையாட்டு விழாவிலும் கிரிக்கட் போட்டியில் 2 ஆம் இடம்

2013 பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவில் கபடிப் போட்டியில் முதலிடம் பெற்று சம்பியனாகவும்,2014 இவ் வருடம் இடம்பெற்ற காத்தான்குடிப் பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவிலும், காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட தேசிய விளையாட்டு விழாவிலும் கபடிப் போட்டியில் 2 ஆம் இடம்.

2013 காத்தான்குடிப் பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவிலும், காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட தேசிய விளையாட்டு விழாவிலும் கரப்பந்தாட்டத்தில் 2 ஆம் இடமும் 2014 இவ்வருடம் இடம்பெற்ற காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட தேசிய விளையாட்டு விழாவில் கரப்பந்தாட்டத்தில் 2 ஆம் இடம்.

2012,2013 காலப் பகுதியில் கிரிக்கட் சுற்றுப்போட்டிகளில் பங்குபற்றி ஓவறூல் சம்பியனாகவும் ஓவறூல் 2ஆம் இடமும் பெற்றது மட்டுமன்றி காத்தான்குடியில் வளர்ந்து வரும் இளம் விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய இக்கழகம் காத்தான்குடியில் ஜாம்பவானாக மிளிர்கிறது இனியும் மிளிரும் என்பது இன்ஷா அல்லாஹ் நிச்சயம் என காத்தான்குடி குபா இளைஞர் விளையாட்டு கழககத்தின் தலைவர் எம்.எம்.சுஜாத் அஹமட் தெரிவித்தார்.

Published by

Leave a comment