மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு

photo 2 – அஸ்மி தாஜூதீன்

காத்தான்குடி: காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் மாணவ தலைவர்களுக்கான ஒரு தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு இன்று (20.03.2014)  பாடசாலையின் நூலக ஒன்று கூடல் மண்டபத்தில் பாடசாலை அதிபர் முபாறக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு வளதாரராக மட்டக்களப்பு தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபையின் பணிப்பாளர் சாலிம் மௌலானா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இவ் தலைமைத்துவ பயிற்சி நெறியினை காத்தான்குடி பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் அஸ்மி தாஜூதீன் அவர்கள் பிரதேச செயலகத்தின் அனுசரணையில் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செலமர்வில் பாடசாலையின் கணக்கியல் பாட ஆசிரியர் இப்றாஹிம், தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் அஸ்மீர் மற்றும் சமீம் ஆசிரியர் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

photo 2photo 3photo 5

Published by

Leave a comment