உலக இருபது20: உலக கிரிக்கட் இதயங்களைக் கொள்ளை கொள்ளும் போட்டி இன்று!

t20– MJ

மேர்பூர்: உலகக் கிண்ணமென்றாலே கிரிக்கட் இரசிகர்களிடத்தில் ஓர் மகிழ்ச்சி அலை தோன்றுவதைக் காண முடிகிறது.அதிலும் இருபது20 போட்டியென்றால் அதைவிடவும் ஆனந்தம். இந்த மகிழ்ச்சியில் உலக கிரிக்கட் இதயங்களைக் கொள்ளை கொள்ளும் போட்டியாக அமைவது இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளாகும்.

வரலாற்று சிறப்புமிக்க இருபது20 உலகத் தொடரின் இதயப் போட்டியாகக் கருதப்படும் இன்றைய இந்தியா-பாகிஸ்தான் போட்டி, பலம் பொருந்திய இந்தியாவை உலகக் கிண்ண தொடரிலிருந்து வெளியேற்ற சகல அணிகளும் பலத்த முயற்சியெடுத்து வரும் நிலையில், இன்று 21-03-2014 வெள்ளி மேர்பூர் மைதானத்தில் உள்ளுர் நேரப்படி இரவு 7:30 மணிக்கு ஆரம்பமாகிறது.

இரு அணிகளுக்குமிடையே ஐந்து இருபது20 போட்டிகள் இதுவரைக்கும் இடம்பெற்றிருக்கின்றன. இந்தியா 3 போட்டிகளிலும், பாகிஸ்தான் ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றிருப்பதுடன், ஒரு போட்டி சமநிலையில் நிறைவு பெற்றிருக்கின்றது.

india-v-pakistan-semi-final-mohali[1]

இருபது20 போட்டிகளைப் பொருத்தமட்டில் பலம் பொருந்திய ஓர் அணியை எதிர்வு கூறமுடியாத நிலை கடந்த காலங்களில் இடம்பெற்ற போட்டிகளை வைத்து நோக்கும்போது எங்களுக்குப் புலப்படுகின்றது.

எனவே ஓர் போட்டி எச்சந்தர்ப்பத்திலும் எதிர்த்திசையில் மாறக்கூடிய நிலை இந்த இருபது20 போட்டிகளில் காணப்படுவது வரலாறு.

எப்படி இருந்தபோதிலும் ஆசியக் கிண்ணம் நிறைவடைந்த மகிழ்ச்சியில் இருக்கும் கிரிக்கட் இரசிகர்களுக்கு நிச்சயமாக இந்த இருபது20 உலகக் கிண்ணம் ஓர் விளையாட்டு விருந்தொன்றை அளிக்கப்போவது என்பது திண்ணம்!

Published by

Leave a comment