வயிறு வளர்க்கும் நக்குத்தின்னிகளும் வால் பிடிக்கும் உப்புத்தின்னிகளும் !

poemபிரகாசக்கவி 

தேர்தலெனும்
கள்ளுக் கடைதிறப்பர்

அங்கே
கூவிக் கூவி
தேங்காயும் விற்பர்

பள்ளி யென்பர்
ஓட்டு போட்டால் அவர்தாம்
ஊருக்குள்ளே ஜல்லி யென்பர்

உரிமை யென்பர்
ஆள்பவனை எருமை யென்பர்

மரமென்பர்
வரமென்பர்
அதற்கு தேவை
உரமென்பர்

ஒட்டு போட்டவன்
ஒன்னுக்கு போகையிலே

எருமையை
பசுவென்பர்

பாலென்பர்
மோரென்பர்

ஜீ பூம் பா சொல்லி
எசப்பாட்டிசைப்பர்

Published by

Leave a comment