‘தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்படுவதற்குரிய வழிவகைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டுவருகிறது’- சிப்லி பாறூக்

???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்படுவதற்குரிய வழிவகைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொண்டுவருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் பதிலளிக்கும் வகையில் விடுத்துள்ள அறிக்கையிலேயே மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கடந்த 30 வருடங்களாக உயிர்களை இழந்து உடைமைகளை இழந்து அகதிகளாகவும்,அனாதைகளாகவும் விதவைகளாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற, வாழ்ந்து கொண்டிருந்த மூவின சமூகங்களும் ஓர் சுபீட்சமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றதோர் நல்ல நோக்கில் அதி மேதகு ஜனாதிபதி அவர்களின் மனிதாபிமான நடவடிக்கையினூடாக மீட்கப்பட்ட சிதைந்து இரத்தக்கறை படிந்த வடகிழக்கிலே அபிவிருத்திகளினூடாக பாதிக்கப்பட்ட மக்களை ஓர் நல்ல நிலமைக்கு கொண்டு வருவதனூடாக எதிர்கால சமூகம் ஓர் தலை சிறந்ததாக மாற வேண்டும் என்பதற்காக பல அபிவிருத்திப்பணிகள் செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்த வகையில் மட்டக்களப்பு கல்லடிப்பாலம், பனிச்சங்கேணிப்பாலம், மண்முனைப்பாலம் என்று மக்கள் போக்குவரத்திற்காக அதிக சிரமங்களை தாங்கிக்கொண்டதன் பலனாக நல்லதோர் போக்குவரத்து வீதிகள், பாலங்கள், சிறு வீதிகள் என்று அபிவிருத்தியடைந்து வருகின்றது.

மண்முனைத்துறையில் காலை 06 மணிக்கு ஒரு பாதை ஆரம்பித்து அதனுடைய சேவை மாலை 06 மணிக்கு முடிவடைகின்ற போது வறுமையின் உச்சக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற படுவான்கரை மக்கள் ஏதேனும் ஒரு திடீர் சுகயீனம் அல்லது விசப்பாம்புக்கடி அல்லது பிள்ளைப்பேறு போன்ற விடயங்கள் மாலை 06 மணிக்கு பிற்பாடு ஏற்பட்டால் அது காலை 06 மணி வரைக்கும் தாமதித்துத்தான் அதற்குண்டான சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடியும்.

அப்படி இல்லாமல் மண்முனை பாலத்தை திறப்பதனூடாக அந்த மக்கள் எந்நேரத்திலும் தங்களுடைய காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்குரிய சந்தர்ப்பம் கிடைக்குமாக இருந்தால் அந்த மக்கள் கஷ்டங்களை அனுபவிக்கமாட்டார்கள்.

shibly
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்

அவர்கள் கஷ்டங்களை அனுபவிக்காவிட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் வாதிகளை அம்மக்கள் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். அரசாங்கம் எல்லா வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி தருகிறது எனக்கூறி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவார்கள்,அதனூடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓரங்கட்டப்பட்டுவிடும் என்ற அச்சத்தினால் தொடர்ந்தும் தமிழ் மக்கள் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும்,வறுமையில் இருந்து மீள முடியாமல் இருக்க வேண்டும்,இனத்துவேசங்களினூடாக சமூகங்களை பிரித்தாழுவதன் மூலம் தங்களது செல்வாக்கை உயர்த்திக் கொள்கின்ற மிக மோசமான நிலைப்பாட்டினூடாக தங்களது வங்குரோத்து அரசியலை செய்ய முனைகின்றனர்.

மண்முனைப் பாலம் திறக்கப்படுவதென்பது படுவான்கரைக்கு அச்சுறுத்தல் என பேசுகின்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் சமூகத்திற்கு சொல்ல வருவது என்னவென்றால் எந்த அபிவிருத்தியையும் நாங்கள் செய்வதற்கு அனுமதிக்க கூடாது அபிவிருத்தி அடைந்தால் எங்களுக்கு பேசுவதற்கு ஒன்றும் கிடையாது என கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முன்வைக்கின்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கடந்த வரலாறுகளை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மறந்து விட்டு பேசுகின்றார் காத்தான்குடி மக்களுக்குச் சொந்தமான படுவான்கரையில் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை தமிழ் ஈழ விடுதலை புலிகள் ஆதிக்கம் செலுத்திய காரணத்தால் அவர்களை தூண்டுவதனூடாக தமிழ் ஈழ விடுதலை புலிகள் முஸ்லிம்களுடைய வயல் காணிகளிலிருந்து களிமண் அகன்றும், இன்னும் பல நூற்றுக் கணக்கான ஏக்கர்களை தங்களுடைய போராளிக் குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்தும் இன்னும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பல இலட்சம் பெறுமதியான காணிகளை வெறும் ஓரிரு ஆயிரங்களுக்கு தமிழ் சகோதரர்களுக்கு பெற்றுக் கொடுத்ததை மறந்து விட்டார்களா? மஞ்சந்தொடுவாய், இருநூறுவில், வடிச்சல், உறுகாமம், உன்னிச்சை, கள்ளியங்காடு, கரடியனாறு, முதலைக்கண்ணடிச்சேனை, கித்துல், திருமங்கலாவெட்டை, மதுரங்குளம், புஞ்சங்குளம், காயங்கேணி, கிருமிச்சை, புனானை அணைக்கட்டு என்றும், குக்கிராமங்கள் என்றும் முப்பதுக்கும் மேற்பட்ட கிரமங்களிலிருந்து 4326 குடும்பங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலியினர் துரத்தியதை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மறந்து விட்டார் போலும்,மேலும் இதே கால கட்டத்தி;ல் ஒல்லிக்குளத்தில் முஸ்லிம்களுடைய பள்ளிவாயலை தரைமட்டமாக்கியமை,இன்று வரை முஸ்லிம்களுக்கு சொந்தமாக இருக்கின்ற கள்ளியங்காடு பிர்தௌஸ் பள்ளிவாயலை கைப்பற்றி அதனை நி;ர்மூலமாக்கி பள்ளி அமைந்திருந்த அதே இடத்தில் பிரம்ம குமாரிகள் ஆலயம் என்றதொன்றை அமைத்து அத்துமீறி அபகரித்து இருக்கின்றார்கள்.அதே போல் சுனாமிக்குப் பிந்திய காலங்களில் காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிக்குச் சொந்தமான காணியில் அன்னளவாக 04 ஏக்கரை அபகரித்து அதிலே வீட்டுத் திட்டங்களை உருவாக்கி சுனாமியால் பாதிக்கப்படாதவர்களை குடியேற்றி முஸ்லிம்களுடைய உரிமைகளை பறித்தது.அதுமட்டுமல்லாமல் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு சொந்தமான கர்பலா காணியில் இரவு வேளைகளில் அத்து மீறி சடலங்களை புதைத்து இது எங்களுடைய மயானம் எனக்கூறி இன்று வரைக்கும் சட்டவிரோதமாக சடலங்களை புதைத்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இவைகள் எல்லாம் முஸ்லிம்களுக்கு செய்கின்ற அநியாயம் என பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரியவில்லை போலும்.இதையும் தாண்டி இன்னும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே குரோத மனப்பான்மையை வளர்க்க நினைப்பதென்பது உங்களுடைய அரசியல் வங்குரோத்தினை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

அநீதி என்பது எந்த சமூகத்திற்கு இழைக்கப்பட்டிருந்தாலும் அது அநீதியே இன்று வரைக்கும் முஸ்லிம்களுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவுடன் இயங்கி வந்த தமிழீழ விடுதலைப்;புலியினரால் இழைக்கப்பட்ட அநீதிகள் எண்ணிலடங்காதவை.

அதன் எச்சமாக இன்று வரைக்கும் இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் அவர்களுடைய பூர்வீக இடங்களுக்கு செல்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவிப்பதுடன் அவர்கள் குடியேறாமல் தடுப்பதற்குரிய எல்லா விதமான பலங்களையும் பிரயோகிக்கின்றனர்.இவ்வாறு இவர்கள் செயற்படுவதன் மூலமாக மீண்டும் தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்படுவதற்குரிய வழிவகைகளை மேற்கொள்கின்றார்கள்.இவர்களுடைய சூழ்ச்சிகளை தமிழ் சமூகமும்,புத்திஜீவிகளும் பாமர மக்களுக்கு பிரித்து விளங்கப் படுத்துவதனூடாக எதிர்காலத்தில் ஒற்றுமை மிக்க சமூகத்தை உருவாக்க பாடுபட வேண்டும்.

மேலும் முஸ்லிம் சமூகத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் ஈழ விடுதலை புலிகளுடன் இணைந்து மிக மோசமாகப்புரிந்த அநியாயங்களை எல்லாம் ஒரு சில விநாடியேனும் மீட்டிப்பார்த்து இதற்குப் பிறகாவது இவ்வாறான இன ரீதியான நச்சுக் கருத்தினை வெளியிடாமல் இருக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் அதில் மேலும் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment