ரியாத்: சவுதியில் 100 வயது பாட்டி ஒருவர் குளியலறையில் வழுக்கி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் அவரது மரணத்திற்கு துக்கம் விசாரிக்க வந்தவர்கள் அனைவரும் அப்பாட்டி ‘ஹதியா’யெடுத்தே ரூ 6 கோடி மதிப்பிற்கு சொத்து சேர்த்த விபரம் அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
சவுதி அரேபியாவின் ஜித்தா பகுதியில் வசித்து வந்தவர் இசா என்ற 100 வயது பாட்டி. கண்பார்வை இழந்து உடல் நலிந்த தோற்றத்துடன் காணப்பட்ட இவர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் ‘ஹதியா’யெடுத்து வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார்.
காலமான இசா பாட்டி 4 வீடுகளுக்கு சொந்தக்காரராம். அதுமட்டுமல்லாமல் ஏராளமாக நகைகள், தங்க நாணயங்கள் வாங்கி அவரது வீட்டில் குவித்து வைத்திருந்திருக்கிறார்.
மொத்தத்தில் அவரின் சொத்து மதிப்பு ரூ.6 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அவர் தனது தாய் சகோதரி என குடும்பம் சகிதமாக ‘ஹதியா’ எடுத்து சேர்த்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment