கடும் காற்றுடனான காலநிலையால் புதிய காத்தான்குடியில் – வீடொன்றுக்கு பாதிப்பு!

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பிரதேசத்தில் 19-03-3014 இன்று புதன்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் திடீரென ஏற்பட்ட கடும் காற்று மற்றும் இடி மின்னல் மழையுடனான காலநிலையால் வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

புதிய காத்தான்குடி சபீனா வீதியில் அமைந்திருக்கும் வீடொன்றின் மேலே தென்னை மரமொன்று முறிந்து விழுந்ததன் காரணமாகவே இவ் அனர்த்தம் ஏற்ப்பட்டு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ் வீட்டில் வசிப்பவர்கள் நடுத்தர வருமானத்தை உடையவர்களாக கானப்படுவதால் இவ் சேதத்தை ஈடு செய்ய முடியாது அங்கலாய்கின்றனர்.

இவ் விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவித்துள்ளதாக குறித்த வீட்டு உரிமையாளர் சஜீர் தெரிவித்தார்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment