பாலமுனை: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குடபட்ட முஸ்லிம் கிராமங்களில் ஒன்றான காத்தான்குடி -பாலமுனை கிராமத்தில் இயங்கும் பாலமுனை அலிகார் மகா வித்தியாலயத்தின் 2014 ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 17-03-2014 நேற்று திங்கட்கிழமை பாலமுனை நெஷனல் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் பாடசாலை அதிபர் எச்.ஏ.றசாக் தலைமையில் மிகக் கோலாகலமாக இடம்பெற்றது.
இங்கு பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில் ஓட்டம் அணி நடை, தேகப் பயிற்சி போன்ற பல்வேறு விளையாட்டுக்கள் இடம்பெற்றன.
இதன் போது பாலமுனை பிரதேசத்திலிருந்து பல்கலைக்கழகம் மற்றும் கல்வியற் கல்லூரி ஆகியவற்றிற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகள் பிரதம அதிதியினால் பதக்கமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஹிறா,சபா,மர்வா ஆகிய மூன்று இல்லங்களாக பிரிக்கப்பட்டு இடம்பெற்ற இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீர ,வீராங்கனைகளுக்கு பிரதம அதிதி பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் , கௌரவ அதிதிகளான மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் ஆகியோரினால் கிண்ணங்களும் ,பரிசில்களும் ,சான்றிதல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதில் 642 புள்ளிகளைப் பெற்று மர்வா இல்லம் முதலாம் இடத்திலும் 593 புள்ளிகளைப் பெற்று சபா இல்லம் இரண்டாம் இடத்திலும் ,560 புள்ளிகளைப் பெற்று ஹிறா இல்லம் மூன்றாம் இடத்திலும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் ,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் , மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் ,மட்டக்களப்பு மத்திய கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் இஸ்மாலெவ்வை, காத்தான்குடி பிரதேச கோட்டக்கல்விப் பணிப்பாளர் சுபைர் ,மண்முனை பற்று பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் முபாறக் ,காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவரும்,சிரேஷ்ட ஊடகவியலாளருமான மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி),மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,உலமாக்கள் ,ஊர் பிரமுகர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
Published by

Leave a comment