கவனத்தை திசை திருப்ப ‘குட்நைட்’ சொன்னாரா விமானி

pilot– SHM 

கோலாலாம்பூர்: மாயமான விமானத்தின் இணை  விமானி ஃபரிக் அப்துல் ஹமீது கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு பேசிய கடைசி வார்த்தை ‘ஓல் ரைட்,  குட் நைட்.  அவர் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்களின் கவனத்தை திசை திருப்ப அவ்வாறு கூறியுள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா கிளம்பிய விமானம் மாயமானது தான் இன்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த விமானம் மாயமானதில் விமானிகளுக்கு பெரும் பங்கு இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

இந்நிலையில் இணை விமானியான ஃபரிக் அப்துல் ஹமீது(27) தான் கட்டுப்பாட்டு அறையை கடைசியாக தொடர்பு கொண்டவர். அவர் தொடர்பு கொள்ளும் முன்பே விமானத்தில் உள்ள தகவல் தொடர்பு சிஸ்டத்தை Switch off செய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகு பேசிய ஹமீதோ எதுவுமே நடக்காதது போன்று ‘ஓல் ரைட்,  குட் நைட்( அனைத்தும் நலம், இனிய இரவு) என்று கூறியுள்ளார்.

pilot

இதனால் விமானி பிறரின் கவனத்தை திசை திருப்பவே இவ்வாறு கூறியதாக கருதப்படுகிறது. மேலும் விமானத்தை வேண்டும் என்றே வழக்கமான பாதையில் இருந்து விலகி வேறு பாதையில் கொண்டு சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.

விமானத்தில் இருந்து ஆபத்து கால சிக்னல் கிடைக்கவில்லை. மேலும் யாரும் விமானத்தை கடத்தியதாகக் கூறவில்லை. அதனால் விமானம் கிடைக்கும் என்று நம்புவதாக மலேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹிஷாமுத்தீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment