இவ்வருடம் நாட்டின் முக்கிய வைத்திசாலைகளில் ஜனாதிபதி வசதிகள் அதிகரிக்க செய்துள்ளார் -பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

hizbullah– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: தேகாரோக்கியமுள்ள சமுதாயத்தை கட்பெயழுப்பும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் எதிர்பாரப்புக்கமைய இவ்வருடம் நாட்டின் முக்கிய கேந்திர நிலையங்களில் உள்ள அரச வைத்தியசாலைக்கு பல்வோறு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதற்கான நிதி ஒதுக்கீடு ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட அதிதீவிர சிகிச்சைப்பிரிவினை திறந்து வைத்தும் உளநல வைத்திய சிகிச்சைப்பிரிவிற்கான புதிய கட்டத்தொகுதிக்கு அடிக்கல் நட்டபின் இடம்பெற்ற விசேட வைபவத்தில் சிறப்புரையாற்றுகையில் கூறினார்.

இவ்வைத்தியசாலை அத்தியட்சகர் எம்.எஸ்.ஜாபிர் தலமையில் நடைபெற்ற இவ்விசேட நிகழ்வில் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தொடர்ந்து உரையாற்றுகையில் இப்பிரதேசத்தில் சுமார் 400க்கு மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு பிரச்சினைகளை முகங்கொடுக்கும் எமது மக்கள் மனநோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் வசதி கருதி சுமார் 20 கோடி ரூபா செலவில் இவ்வைத்தியசாலையில் நவீன சிகிச்சை வசதிகள் கொண்ட உளநல சிகிச்சைப்பிரிவு உருவாக்குவதற்கு எமது அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளது.

hizbullah
பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

இப்பிரதேசத்தில் புற்றுநோயால் மரணத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருது வேதனைக்குரியது. ஒரு சில தினங்களுக்கு ஐவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை தழுவியுள்ளனர். இன்னும் அதிகமானவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதற்கான காரணிகளை கண்டறிய இவ்வைத்தியசாலையும் நகரசபையும் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் இப்பணியை செவ்வன நிறைவேற்ற தேவையான நிதிகளை வழங்க எனது அமைச்சு முன்வருமென தெரிவித்தார்.

கடந்த 30 வருடங்களாக யுத்த சூழலில் வைத்தியசாலைகள் இனரீதியாக செயல்பட்ட துர்பாக்கியநிலை இனியும் ஏற்பட இடமளிக்கமுடியாது இனங்களுக்கிடையே உறவினை கட்டிவளர்க்கும் உறவு பாலமாக அரச வைத்தியசாலைகள் செயல்பட வேண்டும் தமிழ் முஸ்லிம் உட்பட சகல இன மக்களும் ஒருமைப்பட்டுடன் சிகிச்சைபெறும் வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும் இங்கு இவ்வைத்தியசாலையில் மூவினங்களையும் சார்ந்த வைத்திய அதிகாரிகளும் மற்றம் சேவகர்களும் பணியாற்றுவது கண்டு பாராட்டுகின்றேன்.

சகல இனங்களுடன் நல்லுறவை என்றும் வளர்த்து வரும் இவ்வைத்தியசாலையின் அத்தியட்சகர் டாக்டர்.ஜாபீரின் நல்ல பணிகளை மனதார பாராட்டுகின்றேன். எனக்குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லிபாறுக், காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எம்.எஸ்.சியாட்கான், காதிநீதிபதி எஸ்.எஸ்.அலியார் பலாஹி மற்றும் வைத்திய நிபுணர்கள் உட்பட பல பிரமுகர்கள், சமூக சேவையாளர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

Published by

Leave a comment