காத்தான்குடி: காத்தான்குடி மீடியா போரத்தின் 15 வது வருடாந்த மாநாடு 2014 காத்தான்குடி நியூ கடாபி ரெஸ்ட் இன் ஹோட்டலில் கா-குடி மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் 2014-03-15 நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றது.
இதன் போது காத்தான்குடிப் பிரதேசத்தில் நீண்ட காலமாக ஊடகப்பணியாற்றி வரும் மூத்த ஊடகவியலாளர்களான மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா (பலாஹி), றிஸாலா எப்.எம். வானொலி ஸ்தாபகர் கபீர் எம். ஹஸன் ஆகியோர் தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் ,கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா ஆகியோரினால் பொன்னாடை போர்த்தி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்,கௌரவ அதிதிகளாக கலந்து கொண்ட காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவரும்,காதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி),காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.அப்துல் ஜவாத் ஆகியோர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு காத்தான்குடி மீடியா போரத்தின் 15 வது ஆண்டு பூர்த்தி சிறப்பு மலரின் முதற்பிரதி அல் மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் பொதுச் செயலாளர் அஷ்ஷேய்க் மும்தாஸ் மதனிக்கு வழங்கி வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் ,முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2013 தேசிய மீலாத் விழா இறுதிப் போட்டியில் ( அல் குர் ஆன் மனனம் பெண்களுக்கான ஆரம்ப பிரிவில்) தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்த மர்ஹூம் சிரேஷ்ட ஊடகவியலாளர் பழுலுல்லாஹ்வின் புதல்வி; பாத்திமா பதீனாவுக்கு சான்றிதழும் பரிசும் நிகழ்வின் பிரதம அதிதிகளான தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் ,கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் 15வது வருடாந்த மாநாட்டை முன்னிட்டு இளம் ஊடகவியலாளர்களை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற ஊடக செயலமர்வில் பங்குபற்றிய 48 தமிழ்-முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை அதிகாரி ஏ.சி. அப்துல் அஸீஸ்,காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள்,உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள் ,புத்திஜீவிகள்,சிரேஷ்ட ,இளம் ஊடகவியலாளர்கள்,கலை இலக்கிய வாதிகள்,உட்பட காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் நூர்தீன்,செயலாளர் முஸ்தபா,பொருளாளர் பழீலுல் றஹ்மான், நிர்வாகச் செயலாளர் ஜெலீஸ்,உப தலைவர் சாதிகீன்,உப செயலாளர் டீன் பைரூஸ்,உட்பட அதன் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


Leave a comment