கரடியனாறு: மட்டக்களப்பு மாவட்ட கரடியனாறு பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பெருமாவெளி எனும் பிரதேச காட்டுப்பகுதியில் எழுபத்தைந்து வயதுடைய சின்னவன் சிவலிங்கம் என்பவர் இன்றுகாலை தூக்கிட்டு தொங்கி மரணித்த நிலையில் உறவினர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அருகிலுள்ள பெருமாவெளி இராணுவத்தினருக்கு தெரியப்படுத்தி இஅவர்கள் மூலம் கரடியனாறு பொலிசாருக்கு தெரியப்படுத்தப் பட்டுள்ளது.
மட்டக்களப்பு பதில் நீதவான் வீ .வினோபா இந்திரன் அவர்களது கட்டளைக்கு அமைவாக சம்பவம் இடம் பெற்ற பகுதிக்கு கரடியானாறு பொலிசாருடனும், இரானவதினருடனும் சென்ற பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் அவர்கள் ,சடலத்தை பார்வையிட்டு பிரேதப்பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு பொலிசாரைப் பணித்தார்.
நேற்றுக்காலை சித்தாண்டியிலுள்ள தனது வீட்டிலிருந்து வெளியாகிய இவர், இரவு நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் பலரும் இணைந்து தேடுதல் நடத்தியபோதுதான் இன்றுகாலை பெருமாவெளி,பாலையடிப்பட்டி எனும் காட்டுக்குள் பாலை மரத்தில் வயரோன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி மரணித்துக் காணப்படுவதை அவரது மகன் சிவலிங்கம் சோமசுந்தரம் கண்டுள்ளார்.
இவரிடம், மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் அவர்கள் விசாரணை செய்தபோது, ‘எனது தந்தைக்கு வாய்ப் புற்றுநோய் நான்கு வருடமாக இருப்பதால், தற்கொலை செய்து சாகப்போகிறேன் என்று அடிக்கடி கூறுவார் ‘என்று தெரிவித்தார்.
பிரேதப்பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்த மரண விசாரணை அதிகாரி அவர்கள் ‘ கழுத்தில் சுருக்கிட்டு தொங்கியதால் குரல் வளை முறிந்து சுவாசம் தடைப்பட்டதால் இதயம் செயலிழந்து மரணம் சம்பவித்துள்ளது ‘என்றும், இது தற்கொலை என்றும் தீர்ப்பளித்தார்.
Published by



Leave a comment