சேவை நலன்பாராட்டு விழா

mahroof– காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணி

காத்தான்குடி: கடந்த 36 வருடங்களாக ஆசிரியர் சேவையில் இருந்து இறுதியாக காத்தான்குடி மட்/ஷாவியா வித்தியாலயத்தில் கடமையாற்றி அன்மையில் ஓய்வுபெற்ற அல்ஹாஜ் M.மஹ்றூப் ஆசிரியர் அவர்களின் மஹத்தான சேவையினை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு காத்தான்குடி  இஸ்லாமிய இளைஞர் முன்னணியினரால் கடந்த 14.03.2014 அன்று அவர்களது ‘அல் ஹுசைனியா கிட்ஸ் கொலேஜ்’ மண்டபத்தில் இஸ்லாமிய இளைஞர் முன்னணி கல்விமையத்தின் கலைவர் சகோதரர் MA.ஜாபிர் (BCom) JP அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெருளாதார பிரதியமைச்சர் அல் ஹாஜ் MLAM. ஹிஸ்புள்ளாஹ், மாகாணசபை உறுப்பினர் அல் ஹாஜ் பெறியியலாளர் M.சிப்லி பாறூக் (JP),  காத்தான்குடி நகர முதல்வர் அல் ஹாஜ் SHM. அஸ்பர் (JP) ஆகியோருடன் மட்/ஷாவியா வித்தியாலயம்/ மட்/அந் நசார் வித்தியாலயம் ஆகியவற்றின் அதிபர்கள் ஆசிரியர்கள் உட்பட மற்றும் பள்ளிவாயல்களின் தலைவர்கள் ஊர்ப்பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது ஓய்வுபெற்ற ஆசிரியருக்கான நினைவுச்சின்னத்தினை பெருளாதார பிரதியமைச்சர் அல் ஹாஜ் MLAM. ஹிஸ்புள்ளாஹ் மற்றும் இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் தலைவர் அல் ஹாஜ் PMM. மர்சூக் ஆகியோர் இணைந்து வழங்கிவைத்தனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment