சாஸ்திரத்தின் கணிப்பும் பொய்ப்பித்துப் போனது! இப்படியும் ஓர் ஊகம்?

plane 1– S-90

கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தை கடத்தி 9/11 தாக்குதல் போன்று இந்தியாவை தாக்க திட்டமிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மலேசியாவில் இருந்து 239 பேருடன் சீனாவுக்கு கடந்த சனிக்கிழமை கிளம்பிய விமானம் மாயமானது. அந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சீனா 10 செயற்கைக்கோள்களை விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. இந்தியாவும் தனது கடற்படையை தேடல் வேட்டையில் இறக்கியுள்ளது.

விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று இத்தனை நாட்கள் கூறப்பட்டது. ஆனால் தற்போது விமானம் கடத்தப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இந்நிலையில் வெளியுறவுக் கொள்கை ஆய்வாளரும், முன்னாள் அமெரிக்க துணை செயலாளருமான ஸ்ட்ரோப் டால்பாட் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, 9/11 தாக்குதல் போன்று இந்தியாவில் தாக்குதல் நடத்த மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

சினிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைக்கிடையில் விமானம் கண்டுபிடிக்கப்படும்  என இந்தியாவின் பிரபல சாஸ்திரி யுவராஜ் சௌமா கூறியிருந்தார்.  எனினும் 9வது நாளைக் கடந்து செல்லும் இன்றுவரைக்கும் மறைந்த விமானம் கண்டுபிடிக்கப்பட்டது பற்றி எவ்வித நம்பகமான செய்திகளும் வெளிவராமல் இருப்பது மனிதனின் அறிவுக்கு சவாலாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Published by

Leave a comment