அன்புப் பொது மக்களுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கல்வி அபிவிருத்திச் சபை விடுக்கும் முக்கிய அறிவித்தல்.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கல்வி அபிவிருத்திச் சபையினால் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் பாராட்டு விழா இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் மண்டபத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் 2012, 2013 ஆண்டுகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், க.பொ.த (சா/த) பரீட்சையில் 8ஏ, 9ஏ பெற்ற மாணவர்கள், க.பொ.த (உ/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர்.
காத்தான்குடி பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் தவிர்ந்த ஏனைய ஊர்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்று இவ்வாரான பெறுபேறுகளைப் பெற்ற காத்தான்குடி சம்மேளன நிருவாகப் பிரிவிற்குள் உள்ளடக்கப்பட்டுள்ள ஊர்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும், தனிப்பட்ட பரீட்சாத்திகளாகத் தோற்றி சித்தியடைந்தவர்களும் தங்களது விபரங்களை 21.03.2012 வெள்ளிக்கிழமைக்கு முன்னர் கல்விக் குழு செயலாளர் வசம் அல்லது சம்மேளனக் காரியாலயத்தில் தங்களது விபரங்களை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வண்ணம்,
செயலாளர்,
கல்வி அபிவிருத்திச் சபை,
காத்தான்குடி
Leave a comment