கராச்சி: பாகிஸ்தானில் குர்ஆன் எரிக்கப்பட்டதாகக் கூறி ஒரு குழுவினர் அங்குள்ள இந்து கோவிலை தாக்கி, தர்மசாலைக்கு தீ வைத்துள்ளது. தெற்கு பாகிஸ்தானில் உள்ள சிந்த் மாகாணத்தில் உள்ள லர்கானா நகரில் குர்ஆனின் சில பக்கங்களை ஒரு இந்து மதத்தவர் எரித்துவிட்டதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து ஒரு குழுவினர் நேற்று இரவு அந்த நபரின் வீட்டை சூழ்ந்து கொண்டது. மேலும் அப்பகுதியில் உள்ள கோவிலை தாக்கியதுடன், தர்மசாலைக்கும் தீ வைத்தது. இதையடுத்து ஜின்னா பாக் மற்றும் நகரின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று பொலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்து பஞ்சாயத்து தலைவர் கல்பனா தேவி கூறுகையில்,
‘குர்ஆனை எரித்ததாக கூறப்படும் நபர் போதைக்கு அடிமையானவர். லர்கானாவில் உள்ள இந்துக்கள் எந்த மதத்தையும் அவமதிப்பது பற்றி கூட நினைக்க மாட்டார்கள்’ என்றார்.
ஜின்னா பாக் சவுக் பகுதியில் உள்ள கோவிலுக்கு தீ வைக்கப்பட்டது. அந்த தீ பரவி அருகில் உள்ள தர்மசாலை முழுவதுமாக எரிந்துவிட்டது என்று பொலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
![fire[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/06/fire1.jpg?w=141&h=150)
Leave a comment