காத்தான்குடி மீடியா போரத்தின் 2014 -15 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு

kattankudy media forum– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி மீடியா போரத்தின் 2014 -15 ஆண்டுக்கான வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் காத்தான்குடி நியூ கடாபி ரெஸ்ட் இன் ஹோட்டலில் கா-குடி மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் 2014-03-15 நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றது.

இதில் பின்வருவோர் 2014 -15 ஆண்டு நடப்பு வருடத்துக்கான புதிய நிர்வாகிகளாக தெரிவு செய்யப்பட்டனர்.

இதில் போரத்தின் புதிய தலைவராக மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா பலாஹியும், செயலாளராக எம்.ஏ.சீ.எம்.ஜலீஸூம், பொருளாளராக எஸ்.ஏ.கே.பழீலுர் ரஹ்மானும், நிருவாகச் செயலாளராக எம்.எச்.எம்.அன்வரும், உப தலைவர்களாக எம்.எஸ்.எம்.நூர்தீனும் ஏ.எம்.சாதிகீனும்,உப செயலாளராக டீன் பைறூஸூம் ,தகவல் பணிப்பாளராக எம்.எஸ்.எம்.சஜியும் ,நிருவாக உறுப்பினர்களாக எம்.எப்.எம்.பஸால் ஜிப்ரி,சர்மிளா இம்தியாஸ், ஏம்.ஐ.அப்துல்நஸார்,ஏ.எல்.எம்.நியாஸ்,யூ.எல்.எம்.சபீக், கபீர் எம். ஹசன்
,பழுலுல்லாஹ் பர்ஹான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

media

Published by

Leave a comment