காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இரு பெரும் நிகழ்வுகள் இன்று 15.03.2014 நடைபெறவிருக்கின்றன. புனர் நிருமானம் செய்யப்பட்டு விஸ்தரிக்கப்பட்ட தீவிர சிகிச்சை மற்றும் அதி தீவிர கண்கானிப்புப் பிரிவு திறந்த வைக்கப்படவுள்ளது. அத்துடன் மனநல பிரிவு விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று பி.ப 04.00 மணிக்கு வைத்தியசாலையில் நடைபெறவிருக்கின்றன.
இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்து கொள்வதுடன் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் M. சிப்லி பாறுக் அவர்களும் கலந்து கொள்கின்றனர் என வைத்திய அத்தியட்சகர் Dr. MSM.ஜாபிர் தெரிவித்தார்.



Leave a comment