மாயமான மலேசிய விமானம் இன்று அல்லது நாளை கிடைத்துவிடும்: வாஸ்து நிபுணர் கூறுகிறார். பார்ப்போமா??

yuvaraj – SHM

சென்னை: மாயமான மலேசிய விமானம் வரும் சனிக்கிழமைக்குள் கண்டுபிடிக்கப்படும் என்று சென்னையச் சேர்ந்த வாஸ்து நிபுணர் யுவராஜ் சௌமா தெரிவித்துள்ளார். மாயமான மலேசிய விமானத்தை தேட சீனா 10 செயற்கைக்கோள்களை பயன்படுத்தியுள்ளது.

அமெரிக்காவோ ஒரு கப்பல், கண்காணிப்பு விமானத்தை அனுப்பி உள்ளது. விமானத்தை தேடும் பணியில் இந்திய கடற்படை ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் விமானத்தை கண்டுபிடிக்க மலேசியா சூனியக்காரரின் உதவியை நாடியது.

இந்த சூழலில் சென்னையைச் சேர்ந்த ஜோதிடரும், வாஸ்து சாஸ்திர நிபுணருமான யுவராஜ் சௌமா மலேசிய பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

yuvaraj
வாஸ்து நிபுணர் யுவராஜ் சௌமா

‘தற்போது கிரகங்கள், சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் இருக்கும் இடங்களை வைத்து கணித்துள்ளேன். விமானம் சுபநாள் இல்லாத சனிக்கிழமை அதாவது அஷ்டமி அன்று மாயமாகியுள்ளது. விமானத்தை தேடும் முயற்சி வியாழக்கிழமை முதல் பலன் தரும். விமானம் வரும் சனிக்கிழமை அன்று அல்லது அதற்கு முன்பாகவே கிடைத்துவிடும். இருப்பினும் மக்கள் அனைவரும் விமானம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்’ என்றார்.

விஞ்ஞானத்தின் முழுக் கட்டுப்பாட்டில் உலகம் இருப்பதாக போற்றுபவர்களுக்கு இன்று சாஸ்திரம் வாயடைத்திருக்கின்றது.

விஞ்ஞானத்தையும் சாஸ்திரத்தையும் பொய்ப்பிக்கும் மற்றுமொரு சக்தி இருப்பதாக இன்று உலக மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அதுதான் இறைவனின் வல்லமை என்பதை மறுக்க முடியாமல்..

 

Published by

Leave a comment