காத்தான்குடி: பல்கலைக்கழக பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு இலகுவாக தொழில் வாய்ப்பு பெறமுடியாத நிலை நம்நாட்டில் உள்ளது. 2008ம் ஆண்டிற்கு பின்னர் பட்டதாரி நியமனம் வழங்கப்படவில்லையெனக் கொண்டு திறைசேரியின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சுமார் 46 ஆயிரம் பட்டதாரி நியமனங்களை வழங்கினார்.
இந்நியமனத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 2000 பட்டதாரிகள் நியமனம் பெற்றனர். இதில் 800 பேருக்கு எந்தவித நிரந்தர தொழிலும் வழங்க முடியாத நிலையில் கச்சேரிப்பணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் பட்டதாரிகள் இலகுவாக தொழில் வாய்ப்பு பெறமுடியாதுள்ளது. இன்னும் 10 வருடங்களுக்கு பட்டதாரிகள் தொழில் வாய்ப்பினை பெறமுடியாத சூழ்நிலையியுள்ளது. ஆனால் கல்வியல் கல்லூரி கற்கை நெறியை பூர்த்தி செய்யும் மாணவர்க்கு தொழில் வாய்ப்பு இலகுவாக கிடைக்கின்றது.
மாணவர்கள் மத்தியில் சமூக நலன், ஒழுக்கப்பாட்டு கல்வியினை வளர்க்கவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அறிவுரை வழங்குகின்றார். சமூக நலனுக்கு தேவையான உயர்கல்வியினை பெற்றுக்கொடுத்து வெறுமெனே புத்தக படிப்புக்களுக்கு மாத்திரம் கவனம் செலுத்தமானால் நல்ல சமூதாயத்தை உருவாக்கும் கல்வித்திட்டத்தையே கொண்டுவர ஜனாதிபதி விரும்புகின்றார்.
இவ்வாறு அட்டாளைச்சேனை தேசிய கல்வியல் கல்லூரி மாணவர்களின் காத்தான்குடி கல்வி கோட்டத்தில் பெற்ற கள பயிற்சிகளின் முன்னேற்ற ஆவணங்களை இப்பிரதேச பாடசாலைகளுக்கு கையளிக்கும் விசேட நிகழ்விழ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூறினார்.
காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலை கூட்டமண்டபத்தில் அட்டாளைச்சேனை தேசிய கல்வியல் கல்லூரி காத்தான்குடி பிரதேச கல்வி பணிமனையும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த விசேட நிகழ்வில் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தொடர்ந்து பேசுகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ எதிர்பார்க்கும் சிறந்த தலைமைத்துவத்தை கல்வியல் கல்லூரி மாணவர்கள் பெற்றுக்கொள்வது அவசியமாகும். பல்கலைக்கழக பட்டப்படிப்பை பார்க்கிலும் முக்கியத்துவம் வாய்ந்த கற்கையாக தேசிய கல்வியல் கல்லூரி கற்கை கணிக்கப்படுகின்றது.
காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எஸ்எம்.எம். சுபைர் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வில் விசேட அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எந்திரி சிப்லிபாறுக் காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர், மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.அகமட் லெவ்வை அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் உட்பட பல பிரமுகர்களும் மாணவர்களும் பெருமளவில் பிரசன்னமாகி இருந்தனர்.
இங்கு பாடசாலை மாணவர்கள் கல்வியல் கல்லூரி மாணவர்களின் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
Published by

Leave a comment