காத்தான்குடி: தேசிய சுகாதார வார நிகழ்வுகள் காத்தான்குடி தள வைத்தியசாலையில் நடைபெறுகின்றது. சுகாதார அமைச்சினால் தேசிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டுவரும் தேசிய சுகாதார வாரம் 10.03.2014 தொடக்கம் 16.03.2014 வரை நாடு பூராகவும் நடைபெற்று வருகின்றது.
இந்த வகையில் 5வது தினமான இன்று பாடசாலை மாணவர்களின் மத்தியில் பாலியல் மற்றும் துஷ்பிரயோகம் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று 2013.03.14 வெள்ளிக்கிழமை காலை காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) பரீட் மண்டபத்தில் காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. MSM. ஜாபிர் தலைமையில் ஆரம்பமானது. இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டனர்.
பிரதேச கல்விப் பணிப்பாளர் SMM. சுபைர் அவர்களும் கலந்து கொண்ட நிகழ்வில் உளநல வைத்திய நிபுனர் திருமதி சுசிகலா பரமகுருநாதன் அவர்கள் உரை நிகழ்த்தியதுடன் மாணவர்களின் சந்தேகங்களுக்கான தீர்வுகளையும் தெளிவுபடுத்தினார்.
Published by

Leave a comment