கிண்ணியா: கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் நகரசபை உறுப்பினர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜய விக்ரம அவர்களுக்கிடையிலான சந்திப்பொன்ற இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
நகரசபை நகரபிதா தலைமையில் நகரசபை உறுப்பினர்கள் குழுவினர் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமான கலந்துரையாடலாக குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது ஆலோசனைகளும், கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டதாக நகரபிதா தெரிவித்தார். குறித்த சந்திப்பின்போது கிண்ணியா நகரசபை ஊழியர்களின் பிரச்சினைகள் தீர்வுகள் சம்பந்தமாகவும் நகரபிதா மற்றும் உறுப்பினர்கள் ஆளுநரிடம் முன்வைத்தனர்.
இதன்போது ஆளுநர் மொஹான் விஜய விக்ரம முன்வைக்கப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததோடு உரிய அதிகாரிகளுக்கும் இது சம்பந்தமாக உடன் செய்யும்படி பணிப்புரை விடுத்தார். கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், நகரசபை உறுப்பினர்களான ஐ.ரி. சப்ரின், ஏ.எஸ்.எம். நஸீர், பி.ரி.ஜூனைதீன் மௌலவி ஆகியோர் இச்சந்திப்பில் இடம்பெற்றிருந்தனர்.
Published by


Leave a comment