34 வது ஸ்ரீ லங்கா யூத் தேசிய நாடக விழா இம்மாதம் 17ம் திகதி முதல் 27ம் திகதி வரை

youth– பழுலுல்லாஹ் பர்ஹான்

கொழும்பு: தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்¸ இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு
இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள 34 வது ஸ்ரீலங்கா யூத் தேசிய நாடக விழா இம்மாதம் 17ம் திகதி முதல் 27ம திகதி வரை கொழும்பு பிசோப் வித்தியாலய நாடக அரங்கில் பி.ப 6.30மணிக்கு இடம்பெறும்.

இம்முறை இவ்நாட்டிய விழாவுக்காக சிங்கள குறுநாடகம் 13ம்¸ தமிழ் குறுநாடகம் 4ம்¸ நீண்ட நாடகம் 4ம் இடம்பெறும். அதே வேளையில் இதன் ஆரம்ப விழா இம்மாதம் 17ம் திகதி பி.ப 6.30 மணிக்கு இளைஞர் வவிவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் தலைமையில் இடம்பெறும்¸அதேவேளை அமைச்சின் மேற்பார்வை நாடளுமன்ற உறுப்பினரும் கல்வி பிரதி அமைச்சருமான மொஹான் லால் கிரேரு¸ தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவரும் பணிப்பாளர் நாயகமுமான சட்டத்தரணி லலித் பியும் பெரேரா உட்பட கலைஞர்கள், நடிகர்கள் கலந்துகொள்கின்றனர்.

இம்மாதம் 17ம்திகதி தக்ஷிலா ஹிமாஷியின் ‘காடத் ஹொரென்’ சுதர்சன கிஷான்தனின் ‘அபுறு சவாரியக்’ ரொஹான் த சில்வாவின் ‘ஹரியட்ட அயய் திஹ’ ஆகிய குறு நாடகமும் எம். காளிதாஸின்’பஞ்ச சாமுராய்’ தமிழ் குறு நாடகமும் 18ம் திகதி நலின் லுசேனாகே ‘பிரேமவன்ன பிடஸ்தரயா’ நீள் நாடகமும் 19ம் திகதி சுரேஸ் மதுஷான்கே ‘சுபர் மாக்கட்’ அசித் முதுகுமாரவின்’இன்ரவீவ்’ நலோதினி கௌசல்யாவின் ‘செடோவ் ஓப் டாக்னஸ்’குறு நாடகமும் 20ம் திகதி சமில பிரியங்காவின் ‘மெய துவக்குவக்கு நொவே’ நீள் நாடகமும் 21ம் திகதி எஸ்.தரேஸ்வரனின் ‘கனவு’ டி.சிந்துஜனின் ‘பொய் முகம்’ டீ.ஜீவராஜின் ‘நீருக்குள் நெருப்பு’ எனும் தமிழ் குறு நாடகமும் 24ம் திகதி ஜீடி லசன்தவின் ‘தர்மிஸ்ட சமாஜயக் கொட நகமு’ பிரமில சமரகோனின்’அவசன் உஸ்ம லக்’ குசல் மதுரங்கவின் ‘ஹபலக் ஓனே’ திலக்சனி ரத்னாயகவின் ‘தடு எனகல்’ குறு நாடகமும் 25ம் திகதி மலின்த ஜயவர்தனவின் ‘சிதிஜய அகலங்க’ நீள் நாடகமும் 26ம் திகதி சமில விதானவின் ‘மல பெற’ கிஷான்த ஜயபாகுவின் ‘ஹொ ஹொ துஷார’ சஜ்ஜீவ உபுல் பதிரவின் ‘செல்டின் மாகடின்’ எனும் குறு நாடகமும் 27ம் திகதி நலின லுசேனாவின் ‘ஆராஜகயா மரா’ நீள் நாடகமும் அரங்கேற்றப்படவுள்ளன.

Published by

Leave a comment