லண்டன்: பிரிட்டிஷ் பள்ளிக்கூடங்களில் கணித தரத்தை வளர்ப்பதற்கான சிறப்புக் கல்வியை வழங்குவதற்காக சீனாவில் இருந்து ஆசிரியர்கள் கொண்டுவரப்படுகிறார்கள். பிரிட்டனின் கல்வி நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்படும் ஒரு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஆங்கிலம் பேசக்கூடிய 60 ஆசிரியர்கள்வரை ஷங்காயில் இருந்து கொண்டுவரப்படுகிறார்கள்.
இந்தத் திட்டத்தின் கீழ் சீனாவில் உள்ள பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர்கள், கணிதம் கற்றுக்கொடுக்கும் நுணுக்கங்களை மேலும் அறிந்துகொள்வதற்கும் வழி செய்யப்படும்.
சர்வதேச மட்டத்திலான கணிதப் பரீட்சைகளில் ஷாங்காய் மாணவர்கள் மிகவும் அதிகமான பேறுகளைப் பெறும் அதேவேளையில், பிரிட்டன் மாணவர்கள் மிகவும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
BBC
Published by

Leave a comment