எமது சகோதரிகள் வெறும் சமையல்காரிகளாக மட்டும் இருந்துவிடாமல் கல்வி கற்றவர்களாகவும் இருக்க வேண்டும் – இல்ஹாம் மரைக்கார்

ilhaam maraikaarஇப்னு றஹ்மத்

கொழும்பு: எமது சகோதரிகள் வெறும் சமையல்காரிகளாக மட்டும் இருந்துவிடாமல் கல்வி கற்றவர்களாகவும் இருக்க வேண்டும் அப்போது தான் எமது எதிர்கால சந்ததியினரின் சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்ட முடியும் என்று கல்விமான் இல்ஹாம் மரைக்கார் கூறினார்.

மேல் மாகாண சபை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இலக்கம் 42ல் போட்டியிடும் கல்விமான் இல்ஹாம் மரைக்கார் கொலன்னவையில் இடம் பெற்ற பெண்களுக்கான பிரச்சாரம் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் கூறியதாவது,

இன்று எமது நாட்டின் பொருட்களின் விலையேற்றத்தை பார்க்கின்றோம். இதனை முகாமைத்துவம் செய்து வாழ்வது தொடர்பில் எமது கவனம் இருக்கின்றது. தலை நகர் கொழும்பில் வாழும் எமது சகோதரிகள் ஏன் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பில் அறிந்திருக்க கூடாது என்று கேட்க விரும்புகின்றேன். ஆண்கள் மட்டும் தான் அரசியல் அறிவு பெற்றிருக்க வேண்டும் என்பது எங்குமில்லை.

பெண்கள் மத்தியில் விளிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.வெறும் தேர்தல் காலங்களில் மட்டும் வந்து வாக்குகளை பெற்றுவிட்டு பின்னர் இப்பகுதிக்கு வராமல் இருக்கின்ற எத்தனையோ அரசியல் வாதிகளை பாரக்கின்றோம்.

என்னைப் பொறுத்த வரையில் எனது அரசியல் பிரவேசம் காலத்தின் தேவை என கருதுபவன். இன்று வீடுகளில் கல்வி கற்கும், கற்றுவிட்டு உயர் படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் எத்தனையோ மாணவர்கள் இருப்பதை காணமுடிகின்றது. அவர்களது கனவு மற்றும் இலட்சியம் என்பனவற்றை அடைந்து கொள்ளும் வேலைத்திட்டங்களை அவர்களுக்கு வழங்குவதே எனது எண்ணமாகும். அதற்கு சில அதிகார்ஙகள் தேவைப்படுகின்றது. அதனை பெறுவதன் மூலம் இதனை பெற்றுக் கொடுக்க முடியும்.

எதிர்வரும் 29 ஆம் திகதி இடம் பெறும் மாகாண சபை தேர்தல் என்பது மிகவும் முக்கியமானது. அரசாங்கக் கட்சிக்கு மட்டும் வாக்களித்தால் மட்டும் தான் அபிவிருத்திகள் இடம் பெறும் என்று சிலர் பிரசாரம் செய்கின்றனர். அது பொய்யான கதையாகும். அப்படியெனில் எதிர்கட்சி வசமுள்ள கொழும்பு மாநகர சபை மற்றும் ஏனைய மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்றங்களில் மக்களுக்கான அபிவிருத்திகள் இடமத் பெறுவதில்லையா என கேட்கின்றேன். வீடுகளில் இருக்கும் பெண்களை மத்தியில் பலவீனமான கருத்துக்களை பலமானதாக காட்டி அவர்கள் நம்பிக்கை கொள்ளச் செய்து வாக்குகளை அபகரிக்கும் நோக்கில் வரும் வேட்பாளர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு உங்களை கேட்டுக் கொள்ளவிரும்புகின்றேன்.

தலைநகரின் கல்வி நிலையை செழிப்படையச் செய்வதன் மூலம் எமது மக்களின் வாழ்விலும் வசந்தத்தையேற்படுத்த முடியும் என தெரிவித்த கல்விமான் இல்ஹாம் மரைக்கார்இஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வாக்களிப்பதன் மூல் மட்டுமே அரசாங்கத்துடன் பேரம் பேசும் சக்திினை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் கூறினார்.

Published by

Leave a comment