ஆற்றங்கரையில் கம்பீரமாகக் காட்சி தரும் மஸ்ஜிதுல் குபா

quba masjid 2– நமது நிருபர்

காத்தான்குடி: காத்தான்குடி 5ம் குறிச்சி ஆற்றங்கரை ஓரத்தில் கம்பீரமாகக் காட்சி தரும் மஸ்ஜிதுல் குபா ஜூம்ஆ பள்ளிவாயல் தற்பொழுது இப்பள்ளிவாயல் நிர்வாகத்தினரின் முழு முயற்சியின் பயனாக மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது.

வாரம் தோரும் இடம்பெரும் ஜூம்ஆ தொழுகைக்கும் மற்றும் ஐவேளைத் தொழுகைகளுக்கும் தற்பொழுது அதிகளவான மக்கள் மிக ஆர்வத்துடன் கலந்து சிறப்பிக்கின்றனர். இப்பள்ளிவாயலின் உதயத்தின் பின்னர் உறங்கிக்கிடந்த இப்பகுதி தற்பொழுது மிக அழகாகவும் சுறுசுறுப்பாகவும் காட்சியளிக்கிறது.

காத்தான்குடி ஆற்றங்கரை வீதி துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதுடன், ஆற்றங்கரை ஓரத்தை அழகுபடுத்தும் வேலைகளும் ஆரம்பிக்கப்பட இருப்பதால், இப்பள்ளிவாயலை மென்மேலும் விஸ்தரிக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது.

ஜூம்ஆ தொழுகையின்போது பள்ளிலாயலுக்குள் இடமில்லாமல் வெளியில் தொழும் நிலையும் ஏற்படுகிறது.

வாரந்தோரும் இடம்பெற்றுவரும் ஜூம்ஆ தொழுகைக்கு வரும் சகோதரர்களின் அளப்பரிய நன்கொடையின் பங்களிப்புடன் இப்பள்ளிவாயலை நிர்வாகத்தினர் இயக்கி வருகின்றனர்.

இப்பள்ளிவாயலை மென்மேலும் சிறப்பாக எடுத்துச் செல்ல எமது சகோதரர்களின் உதவிகள் தேவைப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள சகோதரர்கள் தங்களால் முடிந்த நன்கொடைகளை அல்லாஹ்வுக்காக பிரதி ஜூம்ஆ தொழுகைக்கு வரும்போது வழங்குமாறும், தனிப்பட்ட ரீதியில் உதவி செய்யவிரும்பும் சகோதரர்கள் இப்பள்ளிவாயல் நிர்வாக சபையினரிடம் தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்படுகின்றனர்.

quba masjid 1quba masjidquba masjid 2

Published by

Leave a comment