அப்துல் மாஹிர் சமதான நீதவானாக சத்தியப் பிரமாணம்

Mahir– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: புதிய காத்தான்குடி 01 பௌஸி மாவத்தையை சேர்ந்த கலந்தர் லெவ்வை அப்துல் மாஹிர் மட்டக்களப்பு மாவட்ட நீதி நிருவாகத்திற்கான சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதி மன்ற நீதிபதி என்.எம். அப்துல்லாஹ் முன்னிலையில் மட்டக்களப்பு மாவட்ட நீதி நிருவாகத்திற்கான சமாதான நீதவானாக சத்திய பிரமாணம் செய்துகொண்டார்.

காத்தான்குடி ஜாமிய்யத்துல் பலாஹ் அறபுக் கல்லூரில் வெளியான மௌலவியும், காத்தான்குடி மட்/அந்-நாசர் வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் காத்தான்குடி நகர சபையின் கீழ் இயங்கும் பொது நூலகத்தில் நூலக உதவியாளராக கடமை புரிந்து வருகின்றார்.

காத்தான்குடி பிரதேசத்தில் பல சமூக சேவைகளில் ஈடுபாடு காட்டி வரும் இவர் இத்திஹாத்துல் உலமாஹ் சபை, காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபை ஆகிவற்றின் உறுப்பினருமான இவர் காத்தான்குடி நகர சபையின் முன்னால் உறுப்பினரான கலந்தர் லெவ்வை  ஜேபியின் புதல்வராவார்.

Mahir
கலந்தர் லெவ்வை அப்துல் மாஹிர்

Published by

Leave a comment