கொழும்பு: கொழும்பு பேலியகொடை பாலத்திலிருந்து விசேட பஸ்சில் வீதி இருமரங்கிலும் சூழ்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் வானைப் பிளக்கும் பலத்த கரகோசத்துக்கு மத்தியிலும் வாத்தியக் கலைஞர்களின் இசை முழக்கங்களிற்கு மத்தியிலும் இலங்கை கிரிக்கெட் சபை வரை அழைத்துச் செல்லப்பட்டனர்.
12 ஆவது ஆசிய கிண்ணத் தொடர் பங்களதாதேஷில் நடைபெற்றது. இதில் லீக் போட்டி அனைத்தையும் வெற்றி கொண்டு இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இலங்கை அணி, நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி 5 ஆவது முறையாக ஆசிய சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.இந்நிலையிலேயே 5 ஆவது முறையாக இலங்கைக்கு ஆசிய கிண்ணத்தை வென்று கொடுத்த இலங்கை அணியினருக்கு இன்று பாரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. VK-
Published by


Leave a comment