உண்மை,நேர்மை,பொறுமை ஆகிய ஆயுதங்களை அணிந்து கொண்டு செயல்படுபவர்களே….. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்.

-டீன் பைரூஸ்-

OLYMPUS DIGITAL CAMERAகாத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய மாநாடு காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள மக்கள் அரங்கில் நடை பெற்ற போது அங்கு உரையாற்றிய ஓய்வு பெற்ற முன்னால்அதிபரும், காழி நீதி பதியுமான அல்ஹாஜ். எம்.எம்.எம். மஹ்றூப் கரீம் (Sp.Td{maths}BA-Dip.Edu-MA-phd.JP[All.Island) அவர்கள்.

ஊழலற்ற,சுயநலமற்ற,எமது சமூக நிலமைகளை தேசிய ரீதியிலும்,சர்வதேச ரீதியிலும்,எடுத்துக் கூற PMGG போன்ற நல்லாட்சிக்கான மக்கள் கட்சியே தேவை என்பதுடன்,  நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பு மூலம் கூட்டு ஒப்பந்தம் செய்து அவர்கள் சகோதர இணைப்புடன் இணைந்தது பிழையல்ல என்று தெரிவித்தார்.

1949 இல் தீர்க்கதரிசிக் கவிஞர் புலவர்மணி கூறுpயது போன்று ‘இருதயத்தில் ஈரிதழ் போல் இங்கு இந்து முஸ்லிம் ஒரு வயிற்றுப் பாலகர் போல் உள்ளோம்- அரசியலில் பேராசை கொண்டோர் பிரிந்து நமைவேறாக்கி ஆராயார் செய்வார் அழிவு’….என்று கூறுகின்றார்.

இதற்கேற்ப இருதயத்தின் ஒரு பகுதி இதழை அழித்து மறுபகுதியால் அம்மனிதன் வாழ முடியாது. இதே போல சிங்களப் பகுதியிலுல்ல முஸ்லிம்கள் அவர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும். இதே போல் தமிழ் பேசும் மக்களாகிய நாம் தமிழ் மக்களுடன் சேர்ந்தே வாழ வேண்டும்.  எனவே எமது சமூக எதிர்கால நலன் கருதி PMGG யுடன் தமிழர் கூட்டணி ஒப்பந்தம் செய்தது சரியேயாகும்.

எனவே,

ரசியலில் அனாதையான மக்களைஅரவணைப்பவர்களாக…….

ற்றல்வாய்ந்தவர்களைஅரவணைத்துஅவர்களின் ஆதரவுன்

ன்றைய இளைஞர்களையும் இணைத்துக் கொண்டு……

டேற்றத்திற்கான சமூக நல்லாட்சியை உருவாக்கி…..

ண்மை,நேர்மை,பொறுமை ஆகிய ஆயுதங்களை அணிந்து கொண்டு

ழலை ஒழித்து ஊக்கமும்,உட்கட்டமைப்புள்ள ஊட்ட சக்தியாக..

தற்கும் அஞ்சாது அணி திரள்பவர்களாக….

சலையும் பேசலை யும் பொருட்படுத்தாதவர்களாக….

க்கியமாய் அனைவரையும் இணைப்பவர்களாக……

ற்றுமை மேலோங்க உழைப்பவர்களாக…..

ர் இமைகளாய் எல்லோரையும மதிப்பவர்களாக….

ஓள டதமான அருமருந்தாய் எம்சமூக நோய்க்கு நிவாரனமாக..

மலர்ந்துள்ள இவ் நல்லாட்சிக்கான இயக்கம் நன்றாக வளர்ந்து நாட்டக்கும்,நம் சமூகத்திற்கும் சிறப்பான சேவையாற்றி சர்வதேச ரீதியிலும், சரித்திரம் படைக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டார்.

OLYMPUS DIGITAL CAMERA

Published by

Leave a comment