-டீன் பைரூஸ்-
காத்தான்குடி:காத்தான்குடி உதைபந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டினில் ஹிஸ்புல்லாஹ் வெற்றிக்கிண்ன சுற்றுத் தொடரின் இரண்டாவது போட்டி (07.03.2014 வெள்ளிக்கிழமை) பி.ப.04.30 மணிக்கு காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய(தேசிய பாடசாலை) மைதானத்தினில் நடை பெற்றது.
இன்றைய போட்டி காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து பாலமுனை நியு கோல்டன் விளையாட்டு கழகம் மோதின.
மோற்படி போட்டிக்கு மத்தியஸ்தராக விiயாட்டு உத்தியோகஸ்தர் எம்.நஸ்லி மின்ஹாஜ் கடமையாற்றினார்.ஏனைய நடுவர்களாக எம்.சமீம்,எம்.எம்.இர்ஷாத்,எம்லெத்தீப் ஆகியோர்கள் கடமையாற்றினார்கள்.
இரு அணிகளும் இளம் வீரர்களைக்கொண்ட கழகம் என்தனால் ஆரம்பத்தில் போட்டி விகவும் விறுவிறுப்பாக காணப்பட்டது.
ஆட்ட முடிவின் போது 4-1 என்ற கோல் அடிப்படையில் காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டிக் கொண்டது.



Leave a comment