மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 239 பேருடன் மாயம்!

plane– SHM

கோலாலம்பூர்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் இன்று அதிகாலை மாயமாகியுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை 2.40 மணிக்கு எம்.எச்.370 என்ற போயிங் விமானம் சீன தலைநகர் பெய்ஜிங் புறப்பட்டு சென்றுள்ளது.

விமானத்தில் 12 ஊழியர்கள் மற்றும் 227 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பெய்ஜிங் போய் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் விமானம் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து காணாமல் போயுள்ளது.

தற்போது மாயமான எம்.எச்.370 போயிங் விமானத்தையும் அதில் பயணம் செய்தவர்களையும் தேடும் பணியில் மலேசிய அரசும் சர்வதேச விமான ஆணையமும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

plane

 

 

Published by

Leave a comment