பெண்ணின் இயற்கைத்தன்மை மற்றும் அவளது பலம், பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட சட்ட விதிமுறைகளின்படி, அவர்களது வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி இல்லறம் சிறக்க ஒழுக்க விழுமியமுள்ள சமூகம் உருவாக வித்திட்டு வாழ்வின் சகல துறைகளுக்குமான வழிகாட்டலைக் கொண்ட மார்க்கமே இஸ்லாமாகும்.
இன்று அனேகமான பெண்கள், பெண்களாகப் பிறந்ததன்றி, வேறு காரணம் எதுவுமின்றியே அடிப்படை மனித உரிமைகள் அற்றவர்களாக வாழ்வை அனுபவித்து வருகின்றனர். ‘சாதி ஒன்றுதான், ஆண் பெண் தன்மை, இரண்டுதான்’ என்பார்கள். மனித உரிமைகள் வரலாற்றினை புரட்டிப்பார்த்தால், ஒட்டு மொத்தமாக பெண்ணினம் அலட்சியப்படுத்தப்பட்டு வந்திருப்பதை நாம் அறிகிறோம். ஆகவே பெண்ணினது உரிமையும் மனித உரிமையே என்பதால் சமூகத்தில் பெண்கள் வகிக்கும் பங்கு பற்றி நாம் அக்கறை கொள்வதோடு, அவர்களின் முன்னேற்றத்திற்கும் குடும்ப வாழ்க்கைக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டிய கடற்பாடு அனைவருக்கும் உண்டு.
உலக சனத்தொகை புள்ளிவிபரங்களின்படி பெண்களின் எண்ணி;க்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லாவிதங்களிலும் ஆண்களைப் போலவே அறிவாற்றல்மிக்கவர்களாக, சிறந்த நிருவாகிகளாக, ஆராய்ச்சியாளர்களாக, அரசியல்வாதிகளாக பெண்கள் இன்று தங்களை வளர்த்துக் கொண்டுள்ளனர் என்பதையிட்டு நாம் பெருமையடைகிறோம்.
ஆனால் மேற்கத்திய நாகரிகத்தில் ஆணும் பெண்ணும் சமம் எனக் கூறி பெண்களை உசுப்பேற்றி அவர்களது நிம்மதியைப் பறித்து, அவர்களது பாதுகாப்பி;ற்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருவதை இன்று காணலாம். ஆனால் எமது நாட்டில் உள்ள பெண்கள் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் பண்பாடுகளில் வளர்க்கப்பட்டவர்களாக இருப்பதால் இவ்வாறான தாக்கங்கள் எதிர்காலத்தில் குடும்ப வாழ்வை சீரழித்து கணவன் மனைவி உறவுக்கிடையிலான பிணைப்பினை இல்லாதொழித்து விடும் என்பதால் மிகவும் கவனமாக இவ்விடயங்களை கையாளவேண்டிய தேவை இருக்கி;னறது.
சர்வதேச மகளிர் தினத்தின் வரலாறு
சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து 1789 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் திகதி பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிசில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமை பெற வேண்டும் என்றும் வேலைக்கு ஏற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண் அடிமைத்தன விடுதலை என்ற கோரிக்கைகளை முன் வைத்து பாரிஸ் நகர தெருக்களில் பெண்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
அந்நாட்டு அரசன் ‘இவர்களை அதிகாரம் கொண்டு அடக்குவேன்’ என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்வேன் என்றும் மிரட்டினான். பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் இதில் கலந்து கொண்டனர். அரச மாளிகையை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் சென்றது. அரசனின் மெய்ப்பாதுகாப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை மிரட்டிய போது, மெய்ப்பாதுகாவலர் இருவரை கூட்டத்தினர் திடீரென்று தாக்கி;க் கொன்றனர்.
இதனை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன் எனவும் உங்களுக்கு சாதகமாக அறிவிப்பேன் என்றும் சமாதானப்படுத்தினான். இக்கோரிக்கையினை செய்ய இயலாது போகவும் அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளிலும்; ஜேர்மனி, இத்தாலியிலும் வேகமாகப் பரவியது. அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க் பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும், பெண்களுக்கு வாக்குரிமை அளி;க்கவும் ஒப்புதல் தந்தார். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் திகதி. இந்த நாள்தான் சர்வதேச பெண்கள் தினமாக நினைவு கூறப்படுகிறது.
உலகம் முழுவதிலும் பெண்களின் அடிப்படை உரிமையில் பல சாதனைகள் அடையப்பட்டிருந்தாலும், இன்னமும் எத்தனையோ பெண்கள் இருட்டறைக்குள் குருட்டு விளக்குகள் போல் கூனிக் கிடக்கின்றனர். சீதனக் கொடுமையென்றும், மணமுடித்த கணவன் அநாதரவாய் விட்டுச் சென்றுள்ளானெனவும், பிள்ளைகளைப் பராமரிக்க முடியாமல் வாழ்க்கைச் சுமைகளை சுமந்து கண்ணீர் விட்டழுகின்ற பெண்களின் நிலை பற்றியும் நாம் கவனஞ்செலுத்த வேண்டும்.
இஸ்லாமியக் கணணோட்டத்தில் பெண்களின் நிலை
பெண்களின் விவகாரங்களை மென்மையாகக் கையாளுங்கள் என இஸ்லாம் கட்டளையிடுகிறது. இஸ்லாத்தில் மனிதாபிமான அடிப்படைகள் தாராளமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டல்களும், தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப கால இஸ்லாமிய சரித்திரங்களை புரட்டிப்பார்கின்ற போது போர்க் காலங்களில் பெண்கள் மற்றும் சிறுமியர்களைப் பாதுகாப்பதில் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் கடமை என இஸ்லாம் வலியுறுத்துகிறது. ‘ பெண்கள், குழந்தைகளைக் கொல்வதை இறைதூதர் தடு;த்துள்ளார்கள். (ஸஹீஹூல் புஹாரி-3015) சுதந்திரமும் வாழ்வுரிமையும் கொண்ட மனித இனத்தின் ஒரு பகுதியாக உள்ள பெண்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் கருத்தாகவே இஸ்லாமியப் போதனைகள் இருக்கின்றது.
கலீபா அபூபக்கர் (றழி) ‘ஸாம்’ தேசத்திற்குப் படைகளை அனுப்பிய போது, போர்த் தளபதியை நோக்கி, நான் உனக்கு 10 விடயங்கள் குறித்து உபதேசி;க்கின்றேன். ‘பெண்களை, குழந்தைகளை, வயோதிபர்களை, கொல்ல வேண்டாம். பிரயோசனமளி;க்கக்கூடிய மரங்களை வெட்ட வேண்டாம். விவசாயத்தில் ஈடுபடுகி;ன்றவர்களை வெளியேற்ற வேண்டாம். ஆடுகளையோ வேறு கழுதைகளையோ கொல்ல வேண்டாம். பேரீச்ச மரங்களை அழிக்க வேண்டாம்’ என உபதேசம் செய்தார்கள்.
பெண்ணானவள் வளரும் வறுமையின் சுமைகளைத் தாங்குவதோடு, பொருளாதார சுரண்டல், சமூக பாரபட்சம், மற்றும் சுமைகளுடன் கூடிய குடு;ம்பப் பொருப்புக்களை இன்னமும் தாங்கிக் கொண்டு வருகிறாள். இந்நிலையில் பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுடன் பெண்களுக்குரிய வன்முறையானது இன்று சமுகத்தின் மத்தியில் கட்டவிழ்க்கப்பட்டிருப்பது கவலைக்குரியது.
இருப்பினும் கடந்த காலங்களை விட இப்போது பெண்களின் உரிமையும், சமூகப்பாங்கும் எவ்வளவோ மேம்பட்டுள்ளன என்றே கூறவேண்டும். ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் பெண்களின் விடயம் மிகவும் தெளிவாக இருக்கின்றது.
நபிகள் (ஸல்) அவர்கள் இறுதிப் பிரசங்கத்தில் பின்வருமாறு கூறினார்கள் ‘மக்களே உங்களுக்கு உங்கள் மனைவியரின் மீது உரிமைகள் இருக்கின்றன. அதேவேளை உங்கள் மனைவியருக்கு உங்களின் மீது உரிமைகள் இருக்கி;ன்றன. அன்புடனும் நேசத்துடனும் உங்கள் மனைவியரை நடத்துங்கள். அல்லாஹ்வின் அமானிதமாகவே அவர்கள் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டு;ள்ளனர்’
உலகத்திற்கோர் உதாரணமாக, குடும்ப வாழ்க்கையை நடாத்திக்காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்கள் பெண்களின் உரிமையினை மதித்து அவர்களுக்கான பாதுகாப்பை மேற்கண்ட உபதேசம் மூலம் உத்தரவாதப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆயிஸா (றழி) அவர்கள் கூறியதாக, ஸஹீஹூல் முஸ்லிம் பின்வருமாறு வலியுறுத்துகின்றது. ‘ஒரு கன்னிப் பெண் அவளது பாதுகாவலரின் மூலம் திருமணம் செய்து வைக்கப்படும் போது, அப்பெண்ணிடம் கலந்தாலோசிப்பது அவசியமா? என நான் அல்லாஹ்வின் தூதரிடம் கேட்டேன். உடனே அல்லாஹ்வின் தூதர் ‘ஆம் நி;ச்சயமாக அப்பெண் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்’ என்று கூறினார்கள். நான் மீண்டும், அப்பெண் வெட்கப்பட்டால் என்ன செய்வது என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர், அவளின் வெட்கமானது அப்பெண்ணி;ன் சம்மதத்தைக் குறி;க்கும் என பதிலளித்தார்கள்’
இதிலிருந்து வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் பெண்களது கருத்துக்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டுமென்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எடுத்தியம்பியுள்ளார்கள்.
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்திலும் பெண்களைப் பற்றிய மனப்பாங்குகள் சட்ட ஏற்பாடுகளில் செல்வாக்கு செலுத்துவதைக் காணலாம். இச்சட்டத்தின்படி, ஒரு பெண் பருவமடைந்ததும் திருமணம் செய்ய முடியும். ஆனால் 12 வயதுக்குக் குறைவாக இருப்பி;ன் காழி நீதிபதியின் அனுமதி பெறப்பட வேண்டும். இச்சட்டமானது ஆண்களுக்கான திருமண வயது, இணக்கத்துக்கான தேவை பற்றி எதனையும் குறி;ப்பிடவி;ல்லை. பெண்களின் விடயத்திற்கே முன்னுரிமை அளிக்கின்றது.
இலங்கையிலுள்ள தனியார் சட்டத்திற்கமைவாக முஸ்லிம் சட்டம், தேசவழமைச் சட்டம் மற்றும் கண்டியச் சட்டங்கள் திருமண, விவாகரத்து மற்றும் சொத்துக்கள் விடயங்களில் பெண்களி;ன் உரிமைகளை வலியுறுத்தியே ஆக்கப்பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான சர்வதேச சட்டத்தின் கீழான பாதுகாப்புக்கள் மனிதாபிமான, மனித உரிமைகள் மற்றும் அகதிகள் சட்டங்களுக்கு உட்பட்ட முறையில் அரசுகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுதக் குழுக்கள் மனிதாபிமான சட்டத்தின் அடிப்படையில் மக்களை பாதுகாக்கவும், அதனை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.
‘ஆண்கள் மற்றும் பெண்களில் எவர் நம்பிக்கையாளராகவும், கீழ்ப்படிவானவர்களாகவும,; வாய்மையாளர்களாகவும், பொறுமையுடையோராகவும,; அல்லாஹ் முன்னிலையில் பணிவானவராகவும,; தான தர்மம் செய்பவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், தமது வெட்கத்தலங்களைப் பாதுகாப்பவர்களாகவும,; இன்னும் அல்லாஹ்வை அதிகம் நினைவுகூருபவர்களாகவும் இருக்கிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அல்லாஹ் பாவ மன்னி;ப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்துள்ளான். (அல்குர்ஆன் 33:35)
எமது பிரதேசத்தில் வன்முறைக் கலாசாரம் வளர்ந்து விட்டது. பொலிஸ் நிலயங்களில், இணக்க சபைகளில், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் இன்னோரன்ன நிறுவனங்களில் பெண்கள் பிரச்சினைகளை முன்வைக்கி;ன்றனர். இதற்கு உரிய தீர்வினை சட்ட ரீதியாக கொடு;க்க முடியாது அதிகாரிகள் தயங்குகின்றனர். ஏனெனில் குடும்பத்தை குழைப்பதை எவரும் விரும்பமாட்டார்கள். இல்லற வாழ்க்கையில் இணைவது எவ்வளவு கடினமோ அதே போல் பிரிவது அதை விடக் கடினம் என்பதை அனைவர்களும் அறிய வேண்டும்.
எனவே பெண்களது உரிமைகள், அவர்களின் பாதுகாப்பு என்பது சட்டங்களினாலோ அல்லது பெண்கள் தினங்களினாலோ உத்தரவாதப்படுத்த முடியாது. இஸ்லாத்தின் போதனைகளை ஏற்று அதன்வழி நடந்து பெண்களை மதித்து அவர்களுக்கான கடமைகளை புரிந்துணர்வின் அடிப்படையில் நடைமுறைப்படுத்துகின்ற போதுதான் அமைதியான வாழ்வை ஒரு மனிதன் அனுபவிக்க முடியும் என்பது தெளிவு. அல்லாஹ் எம்மை நேர்வழிப்படுத்துவோனாக!
Published by

Leave a comment