நல்லாட்சி அரசியலை ஆதரிப்பதற்கு ஈமானின் குறைந்த படித்தரமே போதுமானது…..நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய மாநாட்டில் பொறியியலளர் அப்துர் ரஹ்மான்-

unnamed (6)காத்தான்குடி:’நம் நாட்டின் தற்போதைய நிலவரங்களும் அது எதிர் கொண்டுள்ள சூழ்நிலைகளும் தேசப்பற்றுள்ள அனைவரையூமே மிகவூம் கவலையடையச் செய்வதாக இருக்கிறது. இதற்கான ஒரே தீர்வு நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான நல்லாட்சி ஒன்றினை இந்நாட்டில் ஏற்படுத்துவதேயாகும். முஸ்லிம்களாகிய நாம்தான் இதற்கான பங்களிப்பைச் செய்வதில் முன்னிற்க வேண்டும். அதற்கு குறைந்த பட்ச ஈமானியத் தரமே போதுமானது.
இவ்வாறு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் வருடாந்த தேசிய மாநாட்டில் உரையாற்றும் போது அவ்வியக்கத்தின் சூறா சபை உறுப்பினரும் முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியிலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
கடந் 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் வெகு விமரிசையாக நடைபெற்ற இம்மாநாட்டில் வட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த PMGG யின் சூறா உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள்இ அங்கத்தவர்கள்,ஆதரவாளர்ள் மற்றும் பிரமுகர்கள் என 2200க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் முன்னிலையில் உரையாற்றிய பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது:
‘இந்நாட்டில் சிறுபான்மையாக வாழும் நாம் பல்வேறு பிரச்சினைகளை கடந்த காலங்களில் சந்தித்த போது அதற்கெல்லாம் ஒரே தீர்வாக முஸ்லிம் அடையாள தனித்துவ அரசியல் முன் வைக்கப்பட்டது.

நமது மக்களும் பெருவாரியாக அதற்கு ஆதரவு வழங்கினர். ஆனால் வரலாற்றை இப்போது திரும்பிப் பார்க்கும் போது அந்தத் தனித்துவ அரசியலானது நம்மை தேசிய அரசியலில் தனிமைப்படுத்துகின்ற அரசியலாகவே மாறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
முஸ்லிம் சமூகம் தனக்கிருந்த சுயமரியாதையைக்கூட தற்போது இழந்து இந்த நாட்டில் மேலும் மேலும் ஓரங்கட்டப்படுவதற்கான சூழ்நிலைகளே மேலோங்கி வருவதைப் பார்க்கிறோம். இந்த நாட்டின் அரசியல் யாப்பின் மூலமாக நமக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை மத உரிமைகளைக் கூட சுதந்திரமாக அனுபவிப்பது என்பது இப்போது பெரும் சவாலாக மாறி இருக்கிறது.
ஒழுக்கக் கேடுகளையும் சமூகத் தீமைகளையும் ஊக்குவிக்கும் நிலையங்களாகக் காணப்படும் கசினோக்களும்,இரவுக் களியாட்ட விடுதிகளும் சுதந்திரமாக இயங்குகின்ற இன்றைய சூழலில்,சமூக ஒழுக்கத்தையும்,பண்பாட்டையும், சமாதானத்தையும் போதிக்கும் வணக்கஸ்தலங்கள் மூடப்பட வேண்டும் என அச்சுறுத்தப்படுகின்றன.
மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பொலிசாரே இப்போது தெஹிவளை கடவத்த வீதியிலுள்ள மஸ்ஜிதுல் தாருஸ் ஷாபி பள்ளிவாயல் அமைதிக்குப் பங்கமாக இருப்பதாகக் கூறி அதனை மூடுவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.
இது முஸ்லிம்களை மாத்திரமன்றி இந்த நாட்டில் இன ஐக்கியத்தையும்,சமாதானத்தையும்,எதிர்கால சுபீட்சம் குறித்தும் அக்கறை கொண்டுள்ள அத்தனை பேரையுமே வேதனை கொள்ளச் செய்திருக்கிறது.
இந்த சூழலில்தான் நாம் எமது அடிப்படை உரிமைகளையும், கலாசாரத்தையும்,அடையாளத்தையும், சுயமரியாதையையும் பாதுகாக்கும் வகையில் அரசியலை முன்னெடுக்கின்ற அதேவேளை,இந்த நாட்டின் தேச நிர்மானத்திற்கும் பங்களிப்புச் செய்கின்ற ஒரு முற்போக்கான தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டிய தேவையும் எழுந்திருக்கின்றது.
நாம் சிறுபான்மையாக இந்த நாட்டில் வாழ்கின்ற போதிலும் கூட அரசியல் ரீதியாகவும்,நிர்வாக ரீதியாகவும் சிறந்த பண்பாடுகளையும் முன்னுதாரணங்களையும் இந்நாட்டிற்கு முன்வைக்கின்றவர்களாக நாம் எமது அரசியலை தேசிய ரீதியில் முன்னெடுக்க வேண்டும்.
இதனை எவ்வாறு முன்னெடுப்பது..? இதற்காக எமது மார்க்கம் எமக்குக் காட்டித் தந்துள்ள வழிகாட்டுதல்கள் என்ன..? இந்த உலகிலே நாம் எல்லாம் வல்ல இறைவனின் பிரதிநிதியாக படைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதன் அடிப்படையில் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கின்றவர்களாக நாம் இருக்க வேண்டும் என நமது மார்க்கம் நமக்கு கட்டளையிடுகிறது.
இந்த நாட்டின் தேசிய பங்களிப்பாக நாம் முன்னெடுக்க வேண்டிய தேசிய அரசியலின் அடிப்படை வழிகாட்டுதலாக இதனையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நபரினதும் ஈமானியப் படித்தரத்திற்கேற்ப நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் விடயத்ததில் பல படிமுறைகளை நமது மார்க்கம் ஏவுகின்றது. அதன்படி நன்மையான விடயங்களை ஏவி நன்மையை நேசிப்பதனையும், தீமையானவற்றை வெறுப்பதனையும் ஈமானின் குறைந்தபட்ச படித்தரமாக இஸ்லாம் கூறுகின்றது.
அந்த வகையில் நம் நாட்டில் நிலவும் மோசமான அரசியல் சூழ்நிலைகளை மனதால் வெறுத்து இந்நாட்டிற்கும், இந்நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் ஏற்புடைய நல்லாட்சியை விரும்புவதும்,அதனை ஏற்றுக்கொண்டு அதற்காக வாக்களிப்பதும் நமது குறைந்த பட்ச ஈமானியத் தரத்தின் பிரதிபலிப்பாக அமைய வேண்டும். இதனைக்கூட எம்மால் செய்ய முடியவில்லை என்றால் எமது ஈமானின் நிலை பற்றி நாமே நமக்குள் மீள்பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.
எனவே,இந்நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் சமூகத்தினராகிய நாம் நல்லாட்சியை ஏற்படுத்தல் என்ற தேசிய அரசியல் வேலைத் திட்டத்தில் முன்னணியில் நின்று பங்காற்றுபவர்களாக இருக்க வேண்டும். அதேவேளை அதனைச் செய்வதற்கு நமது குறைந்த பட்ச ஈமானியத் தரமே போதுமானது என்பதனையும் நாம் மறந்து விடக்கூடாது.
எனவேதான் நல்லாட்சியின் அடிப்படையில் நமது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அரசியல் வேலைத்திட்டத்தின் முன்முயற்சியாகவே நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கடந்த 8 வருடங்களுக்கு முன்னால் காத்தான்குடியில் தொடங்கி வைக்கப்பட்டது. இன்று அது இறைவனுடைய உதவியால் எல்லோரும் நம்பிக்கையோடு எதிபார்க்கும்,விருப்பத்தடன் வரவேற்கும் தேசிய அரசியல் வேலைத் திட்டமாக வேகமாக வளர்ந்து வருகிறது’. -இவ்வாறு அவர் கூறினார்.

Published by

Leave a comment